கத்திரிக்காயை வைத்து இப்படி கூட குழம்பு சமைக்கலாமா? காலையில் தெரக்கல் குழம்பு செய்து விட்டால் மூன்று வேலைக்கும் குழம்பு பிரச்சனை இல்லை!
ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு செய்யப்படுகிறது. அதிலும் கத்திரிக்காயில் செய்யப்படும் குழம்பு என்றால் அது மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் குழம்பு வகைகள் மிதமா
ஒவ்வொரு நாள் பொழுதும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைக்க தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வித சுவைகளில் குழம்பு செய்யப்படுகிறது. அதிலும் கத்திரிக்காயில் செய்யப்படும் குழம்பு என்றால் அது மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் தமிழ்நாட்டில் செய்யப்படும் குழம்பு வகைகள் மிதமான காரத்துடன் இருக்கும்.
அவ்வாறு செட்டிநாடுகளில் செய்யும் குழம்புகளில் எப்பொழுதும் மசாலா வாசனை அதிகமாகவே இருக்கும்.இவ்வாறு செய்யப்படும் குழம்பு மிகவும் அருமையான சுவையில் இருக்கும். எனவே தான் செட்டிநாடு சமையல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கிறது. அவ்வாறு செட்டிநாடு ஸ்டைலில் ஒரு அருமையானதெரக்கல் கத்திரிக்காய் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த கத்திரிக்காய் தெரக்கல் குழம்பு செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான டிஷ். ஆரோக்கியம் தரக்கூடிய அசத்தலான இந்த கத்திரிக்காய் தெரக்கல் குழம்பு ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்குதா. வாங்க பார்க்கலாம்.