ருசியான ரோட்டுகடை தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

- Advertisement -

இன்று நாம் ரோட்டோர கடைகளில் செய்யப்படும் சுவையான தக்காளி சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் என்னதான் வீடுகளில் சுவையாக உணவுகளை சமைத்தாலும் அதைவிட ரோட்டோர கடை மற்றும் ஹோட்டல்களை செய்யப்படும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நாம் அப்படி செய்யப்படும் உணவுகளில் கடைகளில் செய்வது போல் பக்குவமாக

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : தாறுமாறான காய்கறி எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

சுவையான தக்காளி சாதம் பற்றி தான் காணப்போகிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் தக்காளி சாதம் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ரோட்டு கடை தக்காளி சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
4 from 2 votes

ரோட்டுகடை தக்காளி சாதம் | Road Side Shop Tomato Sadam Recipe in Tamil

நாம் என்னதான் வீடுகளில் சுவையாக உணவுகளை சமைத்தாலும் அதைவிட ரோட்டோர கடை மற்றும் ஹோட்டல்களை செய்யப்படும் உணவுகள் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நாம் அப்படி செய்யப்படும் உணவுகளில் கடைகளில் செய்வது போல் பக்குவமாக சுவையான தக்காளி சாதம் பற்றி தான் காணப்போகிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் தக்காளி சாதம் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time25 minutes
Total Time35 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Thakkali satham, தக்காளி சாதம்
Yield: 4 people
Calories: 258kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை
  • 1 பெரியவெங்காயம் நறுக்கியது
  • 3 தக்காளி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 பச்சைமிளகாய்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் காரத்திற்கேற்ப
  • ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா

செய்முறை

  • (குறிப்பு: முதலில் சாதத்தை வேக வைத்து எடுத்துகொள்ளவும்)
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து பொன்னிறமாகும் வரை விடவும்.
  • பொன்னிறம் ஆனபிறகு அதில் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து கலந்து விடவும்.
  • பின்பு பெரியவெங்காயம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதங்க விடவும்.
  • வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா, இவை அனைத்தும் சேர்த்து கலந்துவிடவும்.
  • பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும்.
  • வெந்தபிறகு முதலில் நாம் வேகவைத்த சாதத்தை தேவையான அளவு சேர்த்து கிளறி விடவும்.
  • இப்பொழுது சுவையான தக்காளி சாதம் தயார்.

Nutrition

Serving: 650gram | Calories: 258kcal | Carbohydrates: 73g | Protein: 13g | Fat: 2g | Cholesterol: 11mg | Sodium: 2mg | Potassium: 341mg | Fiber: 2.7g | Sugar: 1.2g | Vitamin A: 4.7IU

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here