- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 3
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
நிறைய பேருக்கு சாம்பார விட காரக்குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு சில ஊர்கள்ல கார குழம்பு அப்படின்னு சொல்லுவாங்க ஒரு சில ஊர்கள்ல புளி குழம்பு அப்படின்னு சொல்லுவாங்க. சுடச்சுட சாதத்துல இந்த கார குழம்பு ஊத்தி சாப்பிட்டாலே ரொம்ப ருசியா இருக்கும் அதுலயும் தட்டைப்பயிறு மொச்சை பயிறு இந்த மாதிரியான பயிர் வகைகள் சேர்த்து குழம்பு வைக்கும் போது டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும் அதுக்கு ஏதாவது ரொம்பவே காரசாரமா இல்லாம பருப்பு சேர்த்து ஏதாவது ஒரு காய்கறி கூட்டு வச்சா காம்பினேஷன் ரொம்ப அட்டகாசமா இருக்கும்.
இப்ப எல்லாம் எல்லா விசேஷ வீடுகளிலுமே இந்த மாதிரி ஏதாவது ஒரு பயறு போட்டு கார குழம்பு செய்றாங்க.சாம்பாரை விட இந்த மாதிரியான காரக்குழம்பு வகைகள் தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில இன்னைக்கு நம்ம வைக்கப் போற இந்த தட்டைப்பயிறு புளிக்குழம்பு ரொம்பவே அட்டகாசமா இருக்கும். என்ன குழம்பு வைக்கிறதுன்னு தெரியல ஒரே குழப்பமா இருக்கு அப்படின்னா தட்டைப்பயிறு மட்டும் கடையிலிருந்து வாங்கிட்டு வந்த இந்த குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க மூணு நாளைக்கு கூட இதோட டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும்.
அதுவும் அன்னைக்கு சாப்பிடறதை விட அடுத்த நாள் சாப்பிட்டா டேஸ்ட் இன்னுமே கூடுதலா இருக்கும். இந்த மாதிரி தக்காளி வெங்காயம் எல்லாம் வதக்கி அரைச்சு அந்த மசாலாவில் குழம்பு வச்சீங்கன்னா குழம்பு வாசனை வீடே மணக்கும் ஏன் தெருவை மணக்கும் என்று கூட சொல்லலாம். அந்த வகையில இப்ப வாங்க இந்த சூப்பரான தட்டைப்பயிறு புளிக்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் தட்டை பயிறை நான்கு மணி நேரம் நன்றாக ஊற வைத்து குக்கரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வேக வைத்த தட்டைப்பயிறுடன் குழம்பு மிளகாய் தூள் அரைத்து வைத்த விழுது சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
பிறகு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன் சேர்க்கவும்
பத்து நிமிடங்கள் நன்றாக வெந்த பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து சேர்த்தால் சுவையான தட்டை பயறு புளி குழம்பு தயார்






