வீட்டில் ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறுன்னு இந்த தட்டையை உங்க வீட்டிலேயே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

தட்டை அப்படின்னு சொன்ன உடனே நம்மளுக்கு ஞாபகத்துக்கு வருது அது நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப கிரிஸ்பியா இருக்கும் அப்படின்னு தான். ஆமாங்க ரொம்ப கிரிஸ்பியான இந்த தட்டைய நம்ம வீட்டிலேயே கிடைக்கிற மாதிரி செம டேஸ்ட்ல செய்ய முடியும். இந்த தட்டை சேலம் லதா பேமஸ். ஆனா எல்லா இட

By Ramya · 27/3/2024

தட்டை அப்படின்னு சொன்ன உடனே நம்மளுக்கு ஞாபகத்துக்கு வருது அது நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப  கிரிஸ்பியா இருக்கும் அப்படின்னு தான். ஆமாங்க ரொம்ப கிரிஸ்பியான இந்த தட்டைய நம்ம வீட்டிலேயே கிடைக்கிற மாதிரி செம டேஸ்ட்ல செய்ய முடியும். இந்த தட்டை சேலம் லதா பேமஸ். ஆனா எல்லா இடங்களிலுமே இத விரும்பி சாப்பிடுறவங்க இருப்பாங்க. சேலம் ல கிடைக்கிற அதே மாதிரியான டேஸ்ட் இல்லையே வீட்டிலேயே நம்மளால தட்டை செய்ய முடியும்.

இந்த தட்டை செய்தது ரொம்பவே ஈஸி தான் ரொம்ப கஷ்டமான வேலை ஒன்னும் கிடையாது. சாப்பிட அவ்வளவு ருசியா இருக்கிற இந்த தட்டை செய்றதுக்கு ரொம்ப குறைவான நேரம் மட்டுமே நமக்கு தேவைப்படும். இந்த தட்டை செஞ்சு ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு நல்லா காற்று போகாத அளவுக்கு மூடி வச்சுக்கிட்டா மூணு வாரத்துக்கு கூட வச்சு கிரிஸ்பியாவே சாப்பிடலாம். ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் இதை வைத்து கொடுக்கலாம்.

புளி குழம்புக்கு தயிர் சாதத்துக்கு வெரைட்டி சாதங்களுக்கு இந்த தட்டையை சைடு டிஷ்ஷாவும் வைத்து சாப்பிடலாம்‌ கடலை பருப்பு பாசி பருப்பு போட்டு செய்றதால  தட்டைய கடிக்கும் போது மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச இந்த தட்டை எப்படி ஈசியா செய்றதுன்னு பார்க்கலாம்

இதையும் படியுங்கள் : தீபாவளி ஸ்பெஷல் மொறு மொறுனு கேழ்வரகு மிச்சர் இப்படி வீட்டில் சுலபமாக செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full