சாதத்துடன் பிரட்டி சாப்பிட அருமையான தூதுவளை துவையல் இப்படி செஞ்சி பாருங்கள் கொஞ்சம் கூட மிச்சமாகாது!

தூதுவளை என்றால் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சளி பிரச்சனை தீர்க்கக் கூடிய ஒரு மூலிகை தூதுவளை என்பதுதான். இந்த தூதுவளை உடலுக்கு சளி பிரச்சனைகளை சரி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த முள் செடிகள் இருந்து இலைகளை மட்டும் தனியாக பறித்தெடுத்து அவற்றில் உள்ள முட்களை நீக்கி

By ·

தூதுவளை என்றால் நம் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது சளி பிரச்சனை தீர்க்கக் கூடிய ஒரு மூலிகை தூதுவளை என்பதுதான். இந்த தூதுவளை உடலுக்கு சளி பிரச்சனைகளை சரி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த முள் செடிகள் இருந்து இலைகளை மட்டும் தனியாக பறித்தெடுத்து அவற்றில் உள்ள முட்களை நீக்கி விட்டு துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.

ஆகையால் தூதுவளை செடிகள் உங்கள் வீட்டில் வேலி கொடிகளில் இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது எல்லாம் கீரை கடைகள் காய்கறி கடைகளிலேயே தூதுவளைகள் கிடைக்கின்றன. அவைகளை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிலர் இந்த தூதுவளையை அப்படியே வெறும் வயிற்றில் வெண்ணை சேர்த்து இந்த தூதுவளை வதக்கி உள்ளுக்கு  சேர்த்துக் கொள்வார்கள்.

அப்படி இந்த தூதுவளை உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. பித்தத்தை குறைப்பதற்கும் இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. சளி தொல்லையை தலைவலி போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. இந்த தூதுவளை துவையலை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவை உடலுக்கு நல்ல பயனை கொடுக்கின்றனர்.

இந்தத் துவையலை இட்லியுடன் தோசையுடனும் சேர்த்து சாப்பிடுவதற்கும் நன்றாக இருக்கும். இந்த நல்ல சத்துமிக்க சளி பிரச்சினையை தீர்க்கக் கூடிய தூதுவளை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full