- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.
தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான தக்காளி அடை தோசை. என்ன தக்காளி அடை தோசையா என்று நினைக்கிறீர்களா? ஆமாங்க. தக்காளி வைத்து சுவையான தோசையை செய்து உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு சாப்பிட கொடுங்கள். பொதுவாக நம் காலை உணவாக சாதா தோசை அல்லது ரவை தோசையை தான் நம்மில் பல பேர் வழக்கமாக நம் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து இருப்போம்.
நீங்கள் வழக்கமாக செய்யும் தோசைக்கு ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலுக்காக இந்த மிகுந்த சுவையான தக்காளி அடை தோசையை செய்து உங்கள் குடும்பத்தினரை மகிழ வையுங்கள். அவர்கள் நிச்சயமாக அசந்து போவார்கள். வழக்கமாக தக்காளி வைத்து சட்னி, குழம்பு, குருமா, தக்காளி சாதம் போன்றவையே அதிகமாக செய்து இருப்போம். ஆனால் இன்று தக்காளி வைத்து மொறுமொறு அடை தோசை செய்யலாமா!
இதனையும் படியுங்கள் : மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!
Ingredients
Method
முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி விட்டு மூன்று மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் கிரைண்டரில் வர மிளகாய், ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பருப்பு வகைகளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி, இஞ்சி, மற்றும் கேரட், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் தேவையான அளவு மாவு எடுத்து அதனுடன் உப்பு, வெங்காயம் , நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை சேர்த்து தோசையாக வார்த்து எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தக்காளி அடை தோசை தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்து சாப்பிடலாம்.






