Advertisement
ஸ்நாக்ஸ்

காலை டிபனுக்கு ருசியான தக்காளி அவல் ரெசிபி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

அசத்தலான காலை உணவு அப்படின்னு சொல்லிட்டு தக்காளி அவல் அப்படின்னு சொல்லிட்டீங்க அப்படின்ன நினைக்காதீங்க. உப்புமா அப்படினாலே நம்ம யாருக்குமே அதிகமா பிடிக்கவே பிடிக்காத உணவு அப்படின்னு சொல்லுவீங்க இருந்தாலும் இந்த தக்காளி அவல் ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். தக்காளி அவல் அப்படின்னு சொன்ன உடனே நீங்க உப்புமா அப்படின்னு பீல் பண்ண கூடாது. என்னம்மா உப்புமா செஞ்சீங்களா ரொம்ப தப்பு பண்றீங்க அம்மா அப்படின்ற மாதிரி தான் நம்ம மேல ஒரு எண்ணத்தை வைத்து இருக்கோம்.

ஆனால் அவல் அப்படின்ற உணவு ரொம்ப லைட்டான ஒரு உணவு உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆனா நிறைய கலோரிஸ் வந்து எடுத்துக்காது. அதனால் இந்த மாதிரி உணவை நம்ம சாப்பிடும் பொழுது அது உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். ஏன்னா நம்ம அவலில் ரொம்ப ரொம்ப குறைவான கலோரி உள்ள பொருட்களை மட்டும் தான் நம்ம சேர்த்து செய்யப் போறோம். அதனால அவல் அப்படிங்கறது ஒரு ஹெல்த்தியான உணவு தான். அரசியில் தக்காளி சாதம் செய்து சாப்பிட்டு இருப்போம் ஏன் சேமியாவில் கூட தக்காளி சாதம் மாதிரி செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்போ நம்ம அவல்ல இதை எப்படி செஞ்சு சாப்பிட போறோம் அப்படின்னு பார்த்திருக்கோம்.

Advertisement

நம்ம இப்ப செய்ய போறது தக்காளி அவல் எப்படி செய்யலாம். இந்த தக்காளி அவல் காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்ல மாலை சிற்றுண்டி உணவாகவும் நம்ம எடுத்துக்கலாம். எல்லா அவல் சாப்பாடும் ஒரே மாதிரி சுவைல தான் இருக்கும் அப்படின்னு நினைக்காதீங்க ஒரு ஒரு உணவுக்கும் ஒரு ஒரு தனி ருசி கண்டிப்பாக இருக்கு. அந்த வகையில் இந்த தக்காளி அவல் நம்ம எல்லாருக்குமே ரொம்பவே விருப்பமா பிடிச்சதா இருக்கும். சரி வாங்க எப்படி இந்த தக்காளி அவல் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

தக்காளி அவல் | Tomato aval recipe in tamil

Print Recipe
அவல் அப்படின்ற உணவு ரொம்ப லைட்டான ஒரு உணவு உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆனா நிறைய கலோரிஸ் வந்து எடுத்துக்காது. அதனால் இந்த மாதிரி உணவை நம்ம
Advertisement
சாப்பிடும் பொழுது அது உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும். ஏன்னா நம்ம அவலில் ரொம்ப ரொம்ப குறைவான கலோரி உள்ள பொருட்களை மட்டும் தான் நம்ம சேர்த்து செய்யப் போறோம். அதனால அவல் அப்படிங்கறது ஒரு ஹெல்த்தியான உணவு தான். அரசியில் தக்காளி சாதம் செய்து சாப்பிட்டு இருப்போம் ஏன் சேமியாவில் கூட தக்காளி சாதம் மாதிரி செய்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்போ நம்ம அவல்ல இதை எப்படி செஞ்சு சாப்பிட போறோம் அப்படின்னு பார்த்திருக்கோம்.
Course
Advertisement
snacks
Cuisine tamilnadu
Keyword aval payasam, Aval Poha, aval puttu, Aval vadai, avaraikkai poriyal
Prep Time 10 minutes
Total Time 9 minutes
Servings 5
Calories 114
Cost 50

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • வாணலி

Ingredients

  • 2 கப் கெட்டி அவல்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயம் தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் அவலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நீரூற்றி மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அவலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அவலை ஊற வைக்கத் தேவையில்லை கழுவும் நீரிலேயே அவல் ஊறிவிடும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்கவும் .
  • நன்றாக கடுகு பொரிந்து பிறகு அதில் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை வெங்காயத்தோடு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • நீரெல்லாம் நன்றாக வற்றி சுருள வர போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு அதில் கழுவி வைத்துள்ள அவலை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • மசாலாக்கள் அவலோடு ஒன்றாக கலந்த பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவிகிளறி விட்டு பரிமாறினால் அசத்தலான தக்காளி அவல் தயார்.

Nutrition

Calories: 114kcal | Carbohydrates: 254g | Protein: 12g | Fat: 9g
Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

8 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

10 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

11 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

13 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

14 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

15 மணி நேரங்கள் ago