மோர் குழம்பு சாப்பிட்டு இருப்பீங்க இது என்ன தக்காளி தயிர் குழம்புனு பாக்குறீங்களா. ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு இந்த தக்காளி தயிர் குழம்பு ரெசிபி பாக்குறதுக்கே நாக்குல எச்சில் ஊறும். இந்த ரெசிபியை செஞ்சு பாத்துட்டீங்கனா ரொம்ப ரொம்ப ஈஸியான ரெசிபியா தெரியும் பத்து நிமிஷத்துல சூப்பரா செஞ்சுடலாம். வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் வச்சு செஞ்சிடலாம் வெறும் தயிர் மட்டும் ஊத்தி தயிர் சாதம் சாப்பிடுவதற்கு பிடிக்கல அப்படின்னா இந்த மாதிரி ஒரு தடவை தயிர் வச்சு குழம்பு செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும். ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம்.
ஒருவேளை நீங்க தாமதம் ஆக எழுந்துட்டா கூட இந்த ரெசிபியை 10 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். இதுக்கு அப்பளம் மட்டும் சைடு டிஷ் ஆக இருந்தாலே போதும் டேஸ்ட் அற்புதமா வேற எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. நல்லா சுட சுட சாதத்துல இதை போட்டு சாப்பிடும்போது ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம் அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான ரெசிபி இது. இந்த டேஸ்ட்டுக்கு கண்டிப்பா எந்த குழம்பும் அடிச்சுக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசியா இருக்கும். வீட்ல இருக்க கூடிய குறைவான பொருட்களை வைத்து இதை சட்டுனு செஞ்சிடலாம். வீட்ல அப்பளம் இல்லையென கூட ஊறுகாய் இருந்தாலும் செம டேஸ்டா இருக்கும்.
டெய்லியும் குழம்பு பொரியல் அப்படின்னு செஞ்சு உங்களுக்கு போர் அடிச்சு போச்சு அப்படின்னா ஒரு நாள் மதியம் லஞ்சுக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வீட்ல இருக்க கூடிய எல்லாருமே விரும்பி இதுல மூணு பேர் சாப்பிடுற அளவு மட்டுமே இருக்கு உங்களுக்கு எவ்ளோ பேர் வேணுமோ அந்த அளவுக்கு பொருட்களை அதிகமாக்கி சேர்த்துக்கோங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க அந்த சுவையான சிம்பிளான பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய தக்காளி தயிர் குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தக்காளி தயிர் குழம்பு | Tomato Curd Curry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் தயிர்
- 1 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 துண்டு இஞ்சி
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயம் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- மிளகாய்த்தூள் சீரகத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போனதும் தயிரை நன்றாக அடித்து ஊற்றி கலந்து இறக்கினால் சுவையான தக்காளி தயிர் குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கொங்கு நாட்டு தக்காளி கிரேவி