- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம் இன்று பார்க்க இருப்பது தக்காளி கில்லி பிரியாணி. வழக்கமான தக்காளி சாதத்தை விட சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் அதிக சுவையுடனும் ஒரு ரெசிபியைத் தேடுகிறீர்களா? இது தக்காளி சாதமா அல்லது பிரியாணியா? என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், மிகவும் ரிச்சான சுவையில் அரைத்து விட்ட தக்காளி சேர்த்து செய்த தக்காளி கில்லி பிரியாணி இதோ!
சீரக சம்பா அரிசியின் மணமும், தக்காளியின் புளிப்பும், மசாலாக்களின் காரமும் இணைந்து நாவிற்கு ஒரு விருந்தாக அமையும். இதனை மதிய உணவிற்கும் அல்லது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கும் மிக எளிதாக செய்து விடலாம். இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அரைத்து சேர்ப்பதால் குழந்தைகள் அதை ஒதிக்கி விடாமல் சாப்பிடுவார்கள் ஆகையால் இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும். பொதுவாகவே குழந்தைகள் வெரைட்டி ரைஸ்களை விரும்பி சாப்பிடுவார்கள்.
காரணம், அது அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஈஸியாக இருக்கும், அதே நேரம் சாதம், குழம்பு என தனித்தனியாக சாப்பிடுவதை விட இதுப்போன்ற ரைஸ்களை ஸ்பூனில் எளிதாக சாப்பிடலாம். அதனால் அவர்களுக்கு பிடித்தது போல் இந்த தக்காளி கில்லி பிரியாணி செய்து அதற்கு சைடு டிஷ்ஷா உருளை கிழங்கு வறுவல், சிக்கன் பக்கோடா, முட்டை ஆம்லெட் , காலிஃபிளவர் பக்கோடா ஆகியவற்றை சைடிஷ்ஷாக கொடுத்தால் போது அரை மணி நேரத்தில் காலி செய்துவிடுவார்கள். இப்போது சுவையான தக்காளி கில்லி பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சம்பா ரவை தக்காளி தோசை
Ingredients
Method
முதலில் ஒரு கடாயில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி, இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் உப்பு, பிரியாணி மசாலா சேர்த்து வதக்கி ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி கில்லி பிரியாணி தயார்.






