Advertisement
அழகு

நாம் சருமத்திருக்கு அதிக ஆழகை தரும் தக்காளி பழம்!

Advertisement

நமது முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நம்மில் பலர் விரும்புவார்கள். தங்களது முகத்தில் சிறு பருக்கள் வந்தால் கூட தாங்கி கொள்ள மாட்டோம் உடனே அதை சரி செய்வதற்கான வேலைகளை ஆரம்பித்து விடுவோம். அந்த அளவிற்கு நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். இதற்காக சிலர் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்களையும் மற்றும் இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருள்கள் என விளம்பரப்படுத்தி போலி ஆழகுசாதான பொருட்களையும் வாங்கி நாம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். எனனென்றால் அது நமக்கு அழகை மெறுகேற்றி தருகிறது என்று நம்புகிறோம். ஆனால் அது நாளடைவில் நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நம் உணர்வதே இல்லை. நம் அழகை கூட்டுவதற்காக இயற்கையாகவே நம் வீட்டில் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள் என சில பொருட்களை நாம் பயன்படுத்தி நம் அழகை மெருகேற்றிக் கொள்ளலாம். அழகை கூட்டுவதற்கு தக்காளி எந்த விதத்தில் நமக்கு உதவியாக உள்ளது என்பதை பற்றி இந்த அழகு சாதன குறிப்பில் நாம் பார்க்கலாம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

ஆயில் தன்மை நிறைந்த சருமங்கள்

நம்மில் பலருக்கு சருமம் எண்ணெய் தன்மையுடன் இருக்கும். சருமங்கள் எண்ணெய் தன்மையுடன் இருப்பது நாம் யாருக்கும் பிடிக்காது. ஆகையால் நாம் தக்காளியை பயன்படுத்தினால் தக்காளியில் சாலிசிலிக் அமிலம் அதிகமாக இருப்பதால். நாம் ஒரு தக்காளியை எடுத்து பாதியாக வெட்டி நம் சருவத்தில் ஒரு பாதியை 10 நிமிடம் தேய்த்து விட்டு அதன் பிறகு அடுத்த பாதியையும் நம் முகம் முழுவதும் தேய்த்தால் நம் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை முழுவதுமாக எடுத்து நம் முகத்தை அழகாகவும் பொலிவுடன் காட்டும்.

கரும்புள்ளிகள்

நமது முகத்தில் பலருக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது குறித்த அச்சம் ஏற்படும் ஆனால் தக்காளியில் ஆஸ்ட்ரிஜென்ட் என்ற இயற்கையான பண்புகள் நிறைந்து உள்ளதால். நாம் முகத்தை

Advertisement
தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு தக்காளியை சாறு எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சின்ன காட்டன் துணியை வைத்து நம் முகம் முழுவதும் அப்பிளை செய்து கொள்ளுங்கள். பிறகு 15 நிமிடங்கள் உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி எடுத்தால் நாம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைந்து நமது முக சருமத்தை அழகாக்கும்.

முகத்தை பொலிவுடன் வைக்க
Advertisement

நாம் வெளியில் ஏதேனும் நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் என்று வந்தால் நம் முகம் அழகாக மட்டும் இல்லாமல் பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நம் முகத்தை பொலிவுடன் வைக்க தக்காளியை பயன்படுத்தலாம். தக்காளியில் உள்ள லைகோபீன் சருமத்தில் இறந்த செல்களை அகற்றி மேலும் சூரியனின் புறஊதா கதிர்கள் நம் முகத்தில் ஏற்படும் வறட்சியை குறைத்து நாம் முகத்தை பொலிவாக காட்டும் தன்மை கொண்டது. இதற்காக குளிப்பதற்கு முன் தக்காளி சாறு எடுத்து நம் முகத்தில் அப்ளை செய்து இருபது நிமிடம் உலர்ந்த பின் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதான தோற்றத்தை குறைக்க

பெரும்பாலானவர்கள் வயதாவதை பெரிதும் விரும்ப மாட்டார்கள் எப்பொழுதும் இளமையாக முகமுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இது நடக்காத காரியம் இன்று எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் வயதானாலும் முகம் இளமையாக தோற்றமளிப்பதற்கு தக்காளி பெரிதும் உதவியாக இருக்கும். சிறுது தக்காளி பேஸ்ட் உடன் அவகேடோ பழத்தின் பேஸ்ட்டை சேர்த்து நாம் முகத்தில் அப்ளை செய்து கொண்டு பின் நன்றாக காய்ந்ததும் தண்ணீரை வைத்து கழுவி எடுத்துட்டு வந்தால் நாம் முகம் இளமையான தோற்றம் தரும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

4 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

5 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

7 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

12 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

15 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

16 மணி நேரங்கள் ago