- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, வேர்க்கடலை, எள், தேங்காய், கசகசா, முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, புளி சேர்த்து நன்கு வதக்கி, மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கி, நாம் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
பின் மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி மசாலா கறி தயார்.






