Advertisement
சைவம்

உடுப்பி கருணைகிழங்கு வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! பார்ததாலே நாவில் எச்சி ஊறும்!

Advertisement

கருணைக்கிழங்குகள் ரொம்பவே கருணை உள்ள கிழங்குகள் தான். இதுல அதிக அளவு சத்துக்கள் இருக்கு இந்த கருணைக்கிழங்கு ரொம்பவே அதிக அளவு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடிய ஒரு கிழங்கு வகை. இந்த கருணைக்கிழங்கு ரொம்பவே ருசியா எப்பவும் வறுவல், புளிக்குழம்பு, சாம்பார், மசியல் இந்த மாதிரி நிறைய செய்து சாப்பிட்டு இருப்போம். வித்தியாசமான உடுப்பி ஸ்டைல் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.

இந்த வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும். எப்போதும் இருக்கிற கருணைக்கிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும். எப்பவுமே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியான வறுவல் சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருக்கா அப்போ கருணைக்கிழங்கு இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க. இது உங்க எல்லாருக்குமே பிடிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க.

Advertisement

இந்த கருணைக்கிழங்கு  நினைச்சாலே எல்லாருக்கும் வர பயம் ஒன்னே ஒன்னு தான் அதோட அரிப்பு தன்மை. இந்த கருணைக்கிழங்கு அரிப்பு இல்லாம செய்யறது ரொம்பவே சுலபம். அப்படி தான் நம்ம கருணைக்கிழங்கு செய்து சாப்பிட போறோம். இந்த ருசியான கருணைக்கிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

உடுப்பி கருணைகிழங்கு வறுவல் | Udupi Elephant Yam Fry

Print Recipe
வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும். எப்போதும்இருக்கிற கருணைக்கிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும். எப்பவுமேஉப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியான வறுவல் சாப்பிட்டு போர்அடிச்சு போய் இருக்கா அப்போ கருணைக்கிழங்கு இந்த மாதிரி வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க.இது உங்க எல்லாருக்குமே பிடிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே விருப்பப்பட்டுசாப்பிடுவாங்க. கருணைக்கிழங்கு அரிப்பு இல்லாம செய்யறது ரொம்பவே சுலபம். அப்படி தான் நம்ம கருணைக்கிழங்கு
Advertisement
செய்து சாப்பிட போறோம்.இந்த ருசியான கருணைக்கிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Course Fry, Side Dish
Cuisine tamil nadu
Keyword Udupi Elephant Yam Fry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கருணைகிழங்கு
  • 1 கப் புளி கரைசல்
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் கருணைக்கிழங்கை தோல் சீவி விட்டு  கழுவி நீளவாக்கில் பிரெஞ்ச் ப்ரைஸ் செய்வது போலநறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கருணைக்கிழங்கு, புளிக்கரைசல், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து முக்கால் பதம்வேக வைக்கவும்.
  •  கருணைக்கிழங்கு முக்கால் பதம் வெந்த பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்கருணை கிழங்கில் சோளமாவு, சிறிது  உப்பு சேர்த்துகலந்து வைக்கவும்.
     
  •  
    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய்ஊற்றி அதில் வேகவைத்து எடுத்து வைத்துள்ள கருணைக்கிழங்குகளை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் சீரகம், மிளகு, சோம்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதை நன்றாக வதங்கிய பிறகு அதை அடுப்பை நிறுத்திவிட்டு அந்த சூட்டில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
     
  •  வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதில் மிளகாய்தூள் ,பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து  கலந்து மசாலாக்கள் படும் அளவு கலந்து விட்டு எடுத்து பரிமாறினால் சுவையான உடுப்பி கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Fat: 2g | Sugar: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

21 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago