Advertisement
சைவம்

வாழைப்பூ அடை இப்படி செய்து பாருங்க! வழக்கமாக சுடும் தோசைக்கு ஒரு மறுதலாக இருக்கும்!

Advertisement

வாழைப்பூ அடைவாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு அடை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம்.வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப் பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம்.

இதையும் படியுங்கள் : சுவையான கேழ்வரகு அடை இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் வாழைப்பூவில் அடை செய்து கொடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும். வாழைப்பூ சாப்பிட மாட்டேன் என்று கூறும் குழந்தைகளுக்கு இப்படி செய்து தரலாம். இது அனைத்து சத்துகள் நிறைத்த சம சீரான திடமான உணவு. வித்தியாசமான வாழைப்பூ அடை ரெசிபி உங்களுக்காக.

வாழைப்பூ அடை | Vazhaipoo Adai Recipe in Tamil

Print Recipe
வாழைப்பூ அடை. வாழைப் பூவை வைத்து ஸ்பெஷலான ஒரு அடை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம்.வாழைப்பூவை கூட்டாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். வாழைப் பூவை வைத்து மிஞ்சிப்போனால் வாழைப்பூ வடை செய்வோம். ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் வாழைப்பூவில் அடை செய்து கொடுத்தால் மிகவும் ருசியாக இருக்கும். வாழைப்பூ சாப்பிட மாட்டேன் என்று கூறும் குழந்தைகளுக்கு இப்படி செய்து தரலாம். இது அனைத்து சத்துகள் நிறைத்த சம சீரான திடமான உணவு. வித்தியாசமான வாழைப்பூ அடை ரெசிபி உங்களுக்காக.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Adai, அடை
Prep Time 30 minutes
Cook Time 20 minutes
Total Time 50 minutes
Servings 4 People
Calories 114

Equipment

  • 1 பெரிய பவுல்
  • 1 மிக்ஸி ஜார்
  • 1 கடாய்
  • 1 தோசைக்கல்

Ingredients

  • 1/2 கப் புழுங்கரிசி
  • 1/2 கப் பச்சரிசி
  • 1 கப் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலை பருப்பு
    Advertisement
    மூன்றும் கலந்து
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 கப் வாழைப்பூ

காரத்திற்கு

  • 3 வர மிளகாய்
  • 1 tsp சீரகம்
  • 1 tsp சோம்பு
  • இஞ்சி ஒரு துண்டு
  • 1/4 கப் தேங்காய் துருவல் Optional
  • 1/4 tsp பெருங்காயம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • அரிசியையும் பருப்புகளையும் ஒரு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் அரிசியையும் பருப்புகளையும்,சோம்பு ,மிளகு,இஞ்சி,தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், சீரகம், சேர்த்து மாவாக அரைக்கவும், சின்ன வெங்காயம் சேர்த்தால் மாவுடன் கடைசியில்ஒரு சுற்று விடவும்.
  • சின்ன வெங்காயம் கொரப்பாக அரைபடவேண்டும். பெரிய வெங்காயம் என்றால் cut செய்து மாவுடன் கலக்கவும். வாழைப்பூவை ஆய்ந்து உள்ளே இருக்கும் நரம்பை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். ஆறியதும் நன்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவுடன் வேக வைத்த வாழைப்பூ,கட் செய்து வைத்து இருக்கும் வெங்காயம் உப்பு பெருங்காயம் சேர்த்து கலந்து, பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, ஒரு கரண்டி மாவை விடவும்.
  • ஒருபுறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்க வேண்டும்.இப்போது சூடான அடை தோசை தயார் ஆகிவிடும். இதை தேங்காய் சட்னியுடன் or வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 114kcal | Carbohydrates: 87g | Protein: 15g
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

43 நிமிடங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago