தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.
தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான வாழைப்பூ மசாலா தோசை. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அந்த வகையில் காலை மற்றும் இரவு உணவு வித்தியாசமான வகையில் இருக்க இன்று நாம் வாழைப்பூ தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.
வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! வழக்கமாக நாம் ராகி தோசை அல்லது கோதுமை தோசை தான் தோசை செய்வோம். இன்று நாம் வாழைப்பூ சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சத்தான சுவையான தோசையை எளிமையாகவும், சுவையாகவும் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட.
வாழைப்பூ மசாலா தோசை | Vazhaipoo Masala Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 1 கப் வாழைப்பூ
- 1 துண்டு இஞ்சி
- 5 பல் பூண்டு
- கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 பெரிய வெங்காயம்
- 10 சின்ன வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 பச்சை மிளகாய்
- 2 கப் தோசை மாவு
- 1 டேபிள் ஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து விட்டு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பெரிய வெங்காயம், தக்காளி, கொத்த மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து மூடி வேக விடவும்.
- பின் வாழைப்பூவை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்பு தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வந்து மசாலா வாசனை போனதும் நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து மெலிதாக தோசை வார்த்து அதன் மேல் வாழைப்பூ மசாலாவை வைத்து பரப்பி விடவும்.
- பின் நெய் மற்றும் எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றி மூடி வைத்து தோசை நன்கு சிவக்கும் வரை வேக விட்டு எடுத்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ மசாலா தோசை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!