- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
இன்று பெரும்பாலான மக்கள் சாப்பிடும் ஓர் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான் சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான குருமா, மசாலா செய்து சுவைத்து போர் அடித்திருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால், சற்று வித்தியாசமாக விடுமுறை நாட்களில் அல்லது இரவில் வாழைப்பூ பக்கோடா குழம்பு செய்து சாப்பிடுங்கள். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாட்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது!
அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு போரடித்து விட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியானால் அந்த வாழைப்பூவைக் கொண்டு ஒரு பக்கோடா தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இந்த வாழைப்பூ பக்கோடா குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். பொதுவாக வாழைப்பூ போன்ற வகைகளை குழந்தைகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் சமைத்து தந்தால் சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். இந்த வாழைப்பூ பக்கோடா குழம்பு குழந்தைகள் சாப்பிட ஒரு நல்ல தேர்வு மற்றும் நல்ல மாற்றாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!
Ingredients
Method
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் கடலைப்பருப்பு, சோம்பு, வர மிளகாய், உப்பு, வாழைப்பூ சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, உப்பு சரிபார்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின் புளியை நன்கு கரைத்து அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைப்பூ கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, அன்னாசி பூ, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடா துண்டுகளை சேர்த்து ஒரு கொதி விடவும். பின் குழம்பு லேசாக கெட்டியானதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி விடவும்.
பின் வாழைப்பூ பக்கோடா குழம்பில் ஒன்று சேர்ந்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ பக்கோடா குழம்பு தயார்.






