Advertisement
சைவம்

சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான வாழைப்பூ துவையல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

சுட சுட சாதத்துடன் வாழைப்பூ துவையல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த வாழைப்பூ உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இப்படி செய்து கொடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

வாழைப்பூ துவையல் | Vazhaipoo Thuvaiyal Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதத்துடன் வாழைப்பூ துவையல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த வாழைப்பூ உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இப்படி செய்து கொடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword valaipoo thuvaiyal, வாழைப்பூ துவையல்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 வாழைப்பூ
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 3 வர மிளகாய்
  • 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  • எண்ணெய் வதக்குவதற்கு
  • கடுகு சிறிதளவு
  • கருவேப்பிலை கொஞ்சம்

Instructions

  • முதலில் வாழைப்பூவை நன்கு கழுவி நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி மோர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.
  • அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றாம் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பின் அதே வாணலில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.
  • வதக்கிய வாழைப்பூவுடன் வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், மற்றும் புளி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

14 நிமிடங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

35 நிமிடங்கள் ago

வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முலாம் பழத்தில் ஐஸ்கிரீமா அப்படினு ஷாக் ஆகாதீங்க. சாக்லேட் ஐஸ்கிரீம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், மேங்கோ ஐஸ் கிரீம், சேமியா ஐஸ்…

1 மணி நேரம் ago

வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம் பணம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அசையாது…

3 மணி நேரங்கள் ago

உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாக்க ருசியான பொன்னாங்கன்னி கீரை சூப் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

விதவிதமான சூப் வகைகளில் சத்து நிறைந்துள்ள இந்த பொன்னாங்கண்ணி ரொம்பவே சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. கீரைகளின் சிறந்த பொன்னாங்கண்ணி கீரை…

4 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான வெள்ளை பூசணி சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க

ஒரே மாதிரி சட்னி செய்து போர் அடிக்கிறதா? இனி இதை செய்து பாருங்கள்! இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும்…

5 மணி நேரங்கள் ago