- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான வாழைக்காய் பொடி சாதம் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதுவரை வாழைக்காய் வைத்து சிப்ஸ், வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் வறுவல், வாழைக்காய் கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபி செய்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் வாழைக்காய் வைத்து ஒரு அருமையான வெரைட்டி ரைஸ் ரெசிபி செய்ய போகிறோம்.
குழந்தைகளுக்கு வெரைட்டி ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவர்களுக்கு இந்த வாழைக்காய் பொடி சாதத்தை செய்து கொடுத்து விடுங்கள். இதற்கு சைடு டிஷ் கூட செய்ய தேவை இல்லை. குழந்தைகள் டிபன் பாக்ஸுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்து விட்டாலே போதும் அவர்கள் காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவார்கள். சில சமயங்களில் வீட்டில் குழம்பு வைப்பதற்கு எதுவும் பொருட்கள் இல்லாத சமயத்தில் சிம்பிளா இந்த வாழைக்காய் பொடி சாதம் செய்து சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப ருசியான இந்த ரெசிபியை கண்டிப்பாக வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள். இப்போது சுவையான வாழைக்காய் பொடி சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு வாழைக்காய் மசாலா
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வாழைக்காயை குக்கரில் சேர்த்து ஒரு விசில் விட்டு எடுக்கவும். அதன்பிறகு வாழைக்காயை தீயில் சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு நாம் வறுத்து வைத்துள்ள இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் சுட்டு வைத்துள்ள வாழைக்காயை தோல் நீக்கி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் அரைத்த வைத்துள்ள வாழைக்காய், வேகவைத்த சாதம், உப்பு சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொடி சாதம் தயார்.






