சுவையான வெஜ் பிரியாணி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…

- Advertisement -

பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தான் இருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் அதற்காக நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. வெஜிடேபிள் பிரியாணி செய்து சாப்பிடலாம் இன்று சுவையான வெஜிடேபிள் பிரியாணி எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-
Print
No ratings yet

சுவையான வெஜ் பிரியாணி செய்வது எப்படி ?

பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தான் இருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் அதற்காக நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. வெஜிடேபிள் பிரியாணி செய்து சாப்பிடலாம் இன்று சுவையான வெஜிடேபிள் பிரியாணி எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம் வாருங்கள்
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Main Course
Cuisine: Indian, இந்தியன்
Keyword: VEG BIRIYANI, வெஜ் பிரியாணி
Yield: 4 PERSON

Equipment

 • 1 குக்கர்
 • 1 மிக்ஸி
 • 1 பவுள்

தேவையான பொருட்கள்

தேவையானபொருட்கள்.

 • 2 கப் பாசுமதி அரிசி
 • 2 டேபிள் ஸ்பூன் நெய்
 • 2 பிரியாணி இலை
 • 1 பட்டை 
 • 1 அண்ணாச்சி பூ
 • 4 கிராம்பு  
 • 4 ஏலக்காய்              
 • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
 • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு  விழுது
 • 3 பச்சை மிளகாய்
 • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  
 • 1 டேபிள் ஸ்பூன்  கரம் மசாலா பொடி
 • 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
 • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
 • உப்பு தேவையான அளவு
 • 1 தக்காளி               சிறிதாக நறுக்கியது
 • 2 கேரட் சிறிதாக நறுக்கியது
 • பீன்ஸ்               சிறிதாக நறுக்கியது
 • ¼ கப் காலிப்ளவர் சிறிதாக நறுக்கியது
 • 1 உருளை கிழங்கு சிறிதாக நறுக்கியது
 • ¼ கப் பச்சை பட்டாணி
 • ½ கப் தயிர்
 • கொத்தமல்ல இலை சிறிதளவு
 • புதினா இலை சிறிதளவு

செய்முறை

செய்முறை.

 • குறிப்பு: 2 கப் பாசுமதி அரிசிக்கு 3 கப் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.
 • (முதலில் 2 கப் பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.)
 • குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நெய்  சூடானதும் அதில் 2 பிரியாணி இலை, 1 பட்டை, 4 கிராம்பு, 4 ஏலக்காய், சேர்க்கவும்.
 •  பிறகு  அதில் நறுக்கிய 1 பெரியவெங்காயம்,சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
 • பிறகு 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா பொடி, 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 1 டேபிள்  ஸ்பூன் மிளகாய் தூள், சேர்த்து வதக்கவும்.
 • பின்பு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
 • வெந்ததும் அதில் 2 நறுக்கிய கேரட் , பீன்ஸ்  10 to 12 , நறுக்கிய காலிப்ளவர் ¼ கப், நறுக்கிய உருளை கிழங்கு ஒன்று , பட்டாணி ¼ கப், சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
 • காய்கறிகள் வெந்த பிறகு அதில் ½ கப் தயிர் அல்லது 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு  சேர்த்து நன்றாக கலந்து விடவும். 
 • பிறகு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதில் சிறிதளவு கொத்தமல்லி இலை, புதினா இலைகளை சேர்க்கவும்.
 • நன்றாக கலந்த பிறகு ஊறவைத்த 2 கப் பாசுமதி அரிசியை சேர்த்து ஒரு விசில் வரும்வரை விடவும். வந்தவுடன் அடுப்பை நிறுத்தி 15 நிமிடம் திறக்காமல் அப்படியே விடவும்.
 • 15 நிமிடம் கழித்து  திறந்து பார்க்கவும். அதை கிளறிவிடவும்.
 • இப்பொழுது சுவையான வெஜ்  பிரியாணி இனிதே தயார்.
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here