Advertisement
சைவம்

சுவையான வெஜ் பிரியாணி செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…

Advertisement

பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தான் இருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் அதற்காக நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. வெஜிடேபிள் பிரியாணி செய்து சாப்பிடலாம் இன்று சுவையான வெஜிடேபிள் பிரியாணி எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

சுவையான வெஜ் பிரியாணி செய்வது எப்படி ?

Print Recipe
பொதுவாக அசைவ சாப்பாட்டை விட அதிகமாக நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடாக தான் இருக்கும். மேலும் உடல் உபாதைகள் ஏற்படும்பொழுது அசைவ சாப்பாட்டை தவிர்க்க வேண்டியிருக்கும் அதற்காக நாம் பிரியாணியை சாப்பிடாமல் இருக்க முடியுமா. வெஜிடேபிள் பிரியாணி செய்து சாப்பிடலாம் இன்று சுவையான வெஜிடேபிள் பிரியாணி எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் காணலாம் வாருங்கள்
Course Main Course
Cuisine Indian, இந்தியன்
Keyword VEG BIRIYANI, வெஜ் பிரியாணி
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 4 PERSON

Equipment

  • 1 குக்கர்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

தேவையானபொருட்கள்.

  • 2 கப் பாசுமதி அரிசி
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 பிரியாணி இலை
  • 1 பட்டை 
  • 1 அண்ணாச்சி பூ
  • 4 கிராம்பு  
  • 4 ஏலக்காய்              
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு  விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டேபிள் ஸ்பூன்  கரம் மசாலா பொடி
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 தக்காளி              
    Advertisement
    சிறிதாக நறுக்கியது
  • 2 கேரட் சிறிதாக நறுக்கியது
  • பீன்ஸ்               சிறிதாக நறுக்கியது
  • ¼ கப் காலிப்ளவர் சிறிதாக நறுக்கியது
  • 1 உருளை கிழங்கு சிறிதாக நறுக்கியது
  • ¼ கப் பச்சை பட்டாணி
  • ½ கப் தயிர்
  • கொத்தமல்ல இலை சிறிதளவு
  • புதினா இலை சிறிதளவு

Instructions

செய்முறை.

  • குறிப்பு: 2 கப் பாசுமதி அரிசிக்கு 3 கப் அளவுக்கு தண்ணீர் சேர்க்கவும்.
  • (முதலில் 2 கப் பாசுமதி அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.)
  • குக்கரில் 2 டேபிள் ஸ்பூன்
    Advertisement
    நெய் சேர்த்து நெய்  சூடானதும் அதில் 2 பிரியாணி இலை, 1 பட்டை, 4 கிராம்பு, 4 ஏலக்காய், சேர்க்கவும்.
  •  பிறகு  அதில் நறுக்கிய 1 பெரியவெங்காயம்,சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  • பிறகு 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா பொடி, 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள், 1 டேபிள்  ஸ்பூன் மிளகாய் தூள், சேர்த்து வதக்கவும்.
  • பின்பு நறுக்கிய தக்காளி 1 சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
  • வெந்ததும் அதில் 2 நறுக்கிய கேரட் , பீன்ஸ்  10 to 12 , நறுக்கிய காலிப்ளவர் ¼ கப், நறுக்கிய உருளை கிழங்கு ஒன்று , பட்டாணி ¼ கப், சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
  • காய்கறிகள் வெந்த பிறகு அதில் ½ கப் தயிர் அல்லது 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு  சேர்த்து நன்றாக கலந்து விடவும். 
  • பிறகு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, அதில் சிறிதளவு கொத்தமல்லி இலை, புதினா இலைகளை சேர்க்கவும்.
  • நன்றாக கலந்த பிறகு ஊறவைத்த 2 கப் பாசுமதி அரிசியை சேர்த்து ஒரு விசில் வரும்வரை விடவும். வந்தவுடன் அடுப்பை நிறுத்தி 15 நிமிடம் திறக்காமல் அப்படியே விடவும்.
  • 15 நிமிடம் கழித்து  திறந்து பார்க்கவும். அதை கிளறிவிடவும்.
  • இப்பொழுது சுவையான வெஜ்  பிரியாணி இனிதே தயார்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை…

1 மணி நேரம் ago

அடுத்தமுறை மீன் வாங்கினால் கமகமனு ஃபிஷ் டிக்கா மசாலா இப்படி ஒருமுறை செய்து பாருங்க

மீன் பிரியர்களுக்கு இந்த ருசியான ஃபிஷ் டிக்கா மசாலா கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக …

2 மணி நேரங்கள் ago

சனிபகவானின் வக்கிர பார்வையால் யோகத்தை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

சனிபகவானின் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கும் தாக்கம் நிச்சயமாக ஏற்படும் அந்த வகையில் இப்பொழுது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார்…

4 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க!

இந்த வெயிலுக்கு நமக்கு சாப்பிடணும்  அப்படின்னு கூட தோணாது. நம்ம நினைக்கிறது எல்லாம் எதாவது ஜூஸ் குடிக்கணும் நீராகாரமா ஏதாவது…

6 மணி நேரங்கள் ago

சூப்பரான காய்கறி அவியல் ஈஸியா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

நாகர்கோவில் கன்னியாகுமரி ஏரியால ரொம்பவே பேமஸ் ஆக இருக்கக்கூடிய ஒரு சூப்பரான சிம்பிளான அவியல் பாக்க போறோம். வீட்ல நிறைய…

7 மணி நேரங்கள் ago

பாலக் கீரை கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்கன்னா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!

வாரத்துக்கு மூணு தடவையாவது நம்ம கீரை சாப்பிட்டால் நம் உடம்புக்கு ஆரோக்கியம் கிடைக்கும் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க ஆனால் டெய்லி…

9 மணி நேரங்கள் ago