- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைத்தண்டு அடை ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும். இப்போது பெரும்பாலானவர்கள் இருக்கும் சிறுநீரக கல் பிரச்சனைக்கு வாழைத்தண்டு ஒரு அருமருந்து. ஆனால் வாழைதண்டை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். இது போல அடையாக செய்து கொடுத்தால் அனைவரையுமே விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா ருசியான காளான் வாழைத்தண்டு சூப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!
Ingredients
Method
வாழைத்தண்டை நறுக்கி வேகவைத்து பிசைந்து கொள்ளவும்.
அத்துடன் பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
அதனை வடைகளாக தட்டி, தோசை கல்லில் போட்டு, சுற்றி எண்ணெய் விட்டு வேகவைத்து இறக்கவும்.
வாழைத்தண்டு உடலுக்கு நல்லது என்பதால் அதை சாதாரணமாக சாப்பிட விரும்பாதவர்கள் அடையாக செய்து சாப்பிடலாம்.
வாழைத் தண்டு அடை மிருதுவாகவும், மணமாகவும் இருக்கும்






