- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- dinner, LUNCH
சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தான். இந்த தேங்காய்ப்பால் புலாவ் குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல தேங்காய்ப்பால் புலாவ் செய்தால் ருசியாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் செய்வது சுலபமானது.
குதிரைவாலி அரிசியில் உடல் எடையை குறைக்கவும், அதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இது உதவுகிறது. நிறைய பேர் வீடுகளில் கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்போது சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Ingredients
Method
குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். தேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலிஅரிசியை சேர்க்கவும்.
குக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும். வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும்.
தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம். சுவையான குதிரைவாலி தக்காளி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.






