- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
எலுமிச்சை ஊறுகாய், தக்காளி ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் அப்படின்னு நிறைய ஊறுகாய் வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த வித்தியாசமான கத்திரிக்காய் ஊறுகாய் செய்து பாருங்க சுவை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இத 15 நாள் வரைக்கும் உங்க பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி சாப்பிடலாம். கெட்டே போகாது அவ்வளவு சுவையா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த கத்திரிக்காய் ஊறுகாய் சாப்பிட சாப்பிட்டு சாப்பிட்டு இருக்கணும் போல தோணும். கத்திரிக்காய்ல புளி கூட்டு, கத்திரிக்காய் கிரேவி, கத்திரிக்காய் கார குழம்பு அப்படின்னு செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த கத்திரிக்காய் ஊறுகாய் செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்பவே வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும்.
நல்லெண்ணெய்ல செஞ்சா இதோட டேஸ்ட் இன்னும் ருசியாவே இருக்கும். சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க நல்லா பாக்குறதுக்கு கலர் ஃபுல்லா சாப்பிடுவதற்கு ருசியா ஒரு அல்டிமேட் ஆன ரெசிபியா இந்த கத்திரிக்காய் ஊறுகாய் இருக்கும். பெரும்பாலும் யாருமே கத்திரிக்காய் ஊறுகாய் செஞ்சிருக்க மாட்டீங்க. அதனால கண்டிப்பா இதே செய்முறையில ஒரு தடவை செஞ்சு பாருங்க. சமைக்க தெரியாதவங்களுக்கு கூட இந்த ரெசிபி சூப்பரா வரும்.
15 நாள் ஸ்டோர் பண்ணி வச்சுக்கிட்டு சாம்பார் சாதம் தயிர் சாதம், சுடு சாதம் எல்லாத்துக்குமே போட்டு சாப்பிடலாம். இத செஞ்சு முடிச்சிட்டு கடாயில் இருக்கிறது ஃபுல்லா எடுத்து ஒரு டப்பாவில் ஸ்டோர் பண்ணி வச்சுட்டு அந்த கடாயில் கொஞ்சமா சாதம் போட்டு கிளறி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். நிறைய பேருக்கு அந்த பழக்கம் இருக்கும் இந்த கத்திரிக்காய் ஊறுகாய் செஞ்சு முடிச்சதும் அந்த மாதிரி கடாயில் சாதம் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய கத்திரிக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மீன் எடுத்தா ஒரு தடவை இந்த மீன் ஊறுகாய் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயில் மல்லி விதைகள் ஒரு டீஸ்பூன் வெந்தயம் ஒரு டீஸ்பூன் கடுகு பெருங்காயத்தூள் காஷ்மீரி மிளகாய் அனைத்தையும் சேர்த்து வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதே கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்.
மறுபடியும் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் கருவேப்பிலை நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதக்கி வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து மஞ்சள் தூள் ஒரு பெரிய வெங்காயம் உப்பு அரைத்து வைத்துள்ள பொடி அனைத்தையும் சேர்த்து புளித்தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் ஆற வைத்து ஏதாவது ஒரு டைட்டான டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.






