- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Snack
மாலை நேரத்தில் சுட சுட டீ யுடன் வடை பஜ்ஜி என ஏதாவது ஸ்நாக்ஸ் இருந்தா ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் வகையிலே மற்ற அனைத்தையும் விட இந்த வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அப்படி ஒரு அருமையான டீ டைம் ஸ்நாக்ஸான கோஸ் உளுந்து வடையை நல்ல கிறிஸ்ப்பியா செய்யலாம்.
நிறைய இடங்களில் மொறுமொறுப்பாக உளுந்து வடைகள் கடைகளில் கிடைக்கும். பாட்டிகள் சுட்டு விற்பனை செய்யும் வடையிலிருந்து வரக்கூடிய வாசமே நம்மை இழுக்கும். மூக்கைத் துளைக்கும். கட்டாயம் இதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று நாக்கு சொல்லும். ஆனால், அடிக்கடி இதை கடையில் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல. வீட்டிலேயே மொறு மொறுப்பாக வடை செய்வது நல்லது. அதிலும் இந்த முட்டை கோஸ் சேர்த்து செய்யும் வடை மிகவும் ருசியாக இருக்கும்.
வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும், கொஞ்சம் வித்யாசமாக கோஸ் உளுந்து செய்து பாருங்கள். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறு மொறு கோஸ் உளுந்து வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி கோஸ் உளுந்து வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Ingredients
Method
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். வாழை இலை அல்லது பாலிதீன்கவரில் சிறுஉருண்டைகளாக எடுத்து வைத்து சற்றுமெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
வெங்காயத்திற்கு பதிலாக கோஸ் சேர்த்து செய்யும் வடை சுவையிலும் அருமையாக இருக்கும்.






