- Prep
- 5 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேரட் வைத்து நிறைய விததமான பதார்த்தங்களை சமைத்திருப்போம். கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
இதுவரை கேரட்டை வைத்து பொரியல் செய்து கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த கேரட் , பருப்பு சேர்த்து செய்யும் இந்த கூட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும் தெரியுமா? வாருங்கள் இதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
முதலில் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள்சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
பின்பு மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு,பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
பின் அதில்தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி,பின் அதில் வேக வைத்த பருப்புக்கள் மற்றும் தண்ணீர் ஊற்றி, கேரட் நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவேண்டும்.
கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கினால், கேரட் ரெடி






