- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, tamilnadu
- Course
- Kottu, LUNCH
கேரட் மற்றும் பருப்பு கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய பாணி உணவு, கேரட் பருப்பு உசிலி தமிழர்களின் வீடுகளில் ஒரு சுவையான உணவாகும். ஒரு எளிய வார நாள் மதிய உணவிற்கு வேகவைத்த சாதம் மற்றும் ரசம் சேர்த்து பரிமாறவும். மிகவும் ஆரோக்கியமான உணவு, பருப்பு உசிலி என்பது ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவாகும், இது நொறுக்கப்பட்ட பருப்பு மற்றும் நறுக்கப்பட்ட காய்கறிகளின் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது.
Ingredients
Method
கடலைப்பருப்பை 1மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பின் வடிகட்டி அதனுடன் சீரகம், சோம்பு, வரமிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கேரட்டை சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
பின்பு வெங்காயம் சேர்த்து, உப்பு சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் சிறிது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியதும், ஆவியில் வேக வைத்த கடலைப்பருப்புக் கலவையை கேரட்டில் உதிர்த்து கிளறவும்.
நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.
சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.






