- Prep
- 10 min
- Cook
- 10 min
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் இருக்கும். உங்களுக்கு உங்கள் வீட்டில் செட்டிநாடு ஸ்டைல் சைவ குழம்பு செய்ய, பலரும் விரும்பி சாப்பிடும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு அற்புதமான தெரக்கல் குழம்பு செய்யலாம். இந்த செட்டிநாடு ஸ்டைல் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு தெரக்கல் குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். இவ்வாறு செட்டிநாடு உணவுகள் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இந்த செட்டிநாட்டு சமையல் செய்யக்கூடிய தெரக்கல் குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத்துருவிக்கொள்ளவும். தக்காளியை நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்று ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு,நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சேர்ந்தாற்போல வெந்ததும் இறக்கி பரிமாறவும். இதுதான் செட்டிநாட்டு தெரக்கல். (கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ சேர்த்தும் செய்யலாம்).






