- Prep
- 5 min
- Cook
- 5 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
மதிய உணவிற்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட குழம்பு, பொரியல், வறுவல், ரசம் என அனைத்து வகையான உணவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொரு குழம்பு வைக்கும் பொழுதும் அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு விதமான சுவையில் பொரியல் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் இப்படி கோவைக்காய் சேர்த்து சாதம் ஒருமுறை சுலபமாக செய்தால் சமையல் நேரம் மிச்சமாகும், ருசியான உணவும் கிடைக்கும் .
கோவைக்காயில் உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருப்பதால், இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோவைக்காயில் சாதம் சுவையாக சமைத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி இந்த கோவைக்காய் சாதம் எப்படி பக்குவமாக, சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கோவக்காய், இதுவும் சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி தான். ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். சுவையாக கோவைக்காய் சாதம் எப்படி சமைப்பது ஒரு ஸ்பெஷல் மசாலா அரவையுடன் ஒரு ஸ்பெஷல் ரெசிபி இதோ உங்களுக்காக.
Ingredients
Method
முதலில் பெரிய வெங்காயம், கோவைக்காயை எடுத்து நீளமாக வெட்டி கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து துருவி கொள்ளவும்.
அதன் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு. உளுந்து, கடலைப் பருப்பை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,
மேலும் அதனுடன் நறுக்கிய கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கியதும், பின்பு அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து நன்கு கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பின்பு அதில் பச்சை அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் கழித்து நன்கு கிளறியபின் இறக்கி பரிமாறினால் ருசியான கோவைக்காய் சாதம் தயார்.






