- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
உங்க வீட்ல சிக்கன் மட்டன் முட்டை எதுவும் இல்லாத சமயத்துல இல்ல நீங்க அசைவம் சாப்பிடாத நேரத்தில் ஒரு சூப்பர் டேஸ்டான இந்த குஸ்காவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. பிரியாணி சாப்பிடற மாதிரியே நமக்கு ஒரு பீல் இந்த குஸ்கா கொடுக்கும். சில சமயங்கள்ல நம்ம வீட்டுல காய்கறிகள் கூட இல்லாம இருக்கோம் அந்த சமயத்துல நீங்க இந்த குஸ்கா செஞ்சு கூடவே கொஞ்சமா தயிர் பச்சடி வச்சா போதும் டேஸ்ட் பயங்கரமா இருக்கும்.
இந்த குஸ்காவை ஒரே ஒரு தடவை நீங்க செஞ்சு சாப்பிட்டு பாருங்க சாப்பிடுறதுக்கே ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வராங்க அந்த சமயத்துல நீங்க அசைவம் செய்யலன்னா இந்த குஸ்காவை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ஹோட்டல்ல கிடைக்குற அதே டேஸ்ட்ல குஸ்கா சாப்பிடணும்னா வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
அரை மணி நேரத்துல இந்த குஸ்காவை ரெடி பண்ணிடலாம் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கூட இந்த குஸ்கா ரெசிபியை செஞ்சு கொடுத்து அனுப்பலாம் சாப்பிடவே அவ்வளவு ருசியா இருக்கும் குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலியா ஆக்கிட்டு தான் ஈவினிங் வீட்டுக்கு வருவாங்க. அந்த அளவுக்கு இந்த குஸ்கா ஓட டேஸ்ட் ரொம்ப அற்புதமாக இருக்கும் இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான சிம்பிளான குஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை கிராம்பு பிரியாணி இலை கல்பாசி தாளித்துக்கொள்ளவும்.
பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த விழுதையும் வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக வதக்கி மிளகாய் தூள் பிரியாணி மசாலா சேர்த்து வதக்கவும்
தயிர் சேர்த்து நன்றாக கிளறி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.
ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கொதித்ததும் அரிசியை சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான குஸ்கா தயார்.






