- Prep
- 5 min
- Cook
- 8 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Dessert
பந்தி அப்படின்னாலே பாயாசம் இருக்கணும். நம்ம ஊர்ல சேமியா பாயாசம், பால் பாயாசம், ஜவ்வரிசி பாயாசம் , பலாப்பழ பாயாசம், இளநீர் பாயாசம் அப்படின்னு பாயாசத்துல பல வகைகளை வைத்து ருசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் ருசிக்க இருக்கும் பாயாசம் அரிசி பாயாசம். இது வட இந்தியாக்களில் ஒரு முக்கிய பிரதான உணவாக இருக்கு.
குங்குமபூ அரிசி பாயாசத்தை வந்து கீர் அப்படின்னு சொல்லுவாங்க. அரிசி கீர் அப்படிங்கறது வட இந்தியாவில் ரொம்ப பிரபலமான ஒரு டிஷ் அந்த டிஸ்ஸ எப்படி செய்யலாம். இந்த அரிசி கீர் சாதாரண அரிசி, பாஸ்மதி அரிசி இல்ல உங்கிட்ட இருக்க எந்த அரிசி ஆனாலும் செஞ்சுக்கலாம். பச்சரிசி, புழுங்கரிசி எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அரிசியில் இந்த ரைஸ் கீர் அதாவது அரிசி பாயசத்தை செஞ்சு சுவைத்து உன் குடும்பத்துல இருக்க எல்லாருக்கும் பாயாசம் பரிமாறி சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் பெற்றுக் கொள்ளுங்கள். இனிப்பு என்பது பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.
அரிசி பாயாசம் இந்த அரிசி பாயாசத்தில் குங்குமப்பூ, நட்ஸ், பால் , உலர் திராட்சை இது எல்லாத்தையும் நல்லா சேர்த்து நமக்கு புடிச்ச வித்தியாசமான முறைல செய்யப்போறம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இந்த அரிசி பாயாசம் செய்து அசத்த போறோம். இந்த அரிசி பாயாசத்த திகட்ட திகட்ட சுவைக்கும் போது அரிசி பாயசத்தில் நம்ம மனச மறந்து இருக்கிற எல்லா பாயாசமும் சரியாகற அளவுக்கு சாப்பிட போறோம். சரி இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் அரிசியை சேர்த்து ஒன்று இரண்டாக உடைத்துக் கொள்ளவும். பிறகு அரிசியை நீரில் ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானது பிறகு பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் .
ஒரு கடாயில் நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து வதக்கவும்.
பால்கொதித்ததும் அதில் குங்குமபூ மற்றும் தாளித்தவைகளைசேர்க்கவும்.பால் நன்றாக கொதி வந்ததும் அதில் ஊற வைத்துள்ள அரிசியைசேர்த்துகிளறவும் . 10 முதல்15 நிமிடம் நன்றாக அரிசி பாலோடுவெந்து வந்ததும் பால் வற்ற ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
சர்க்கரை நன்றாக கலந்து அரிசி நன்றாக வெந்து வந்த பிறகு அதில் பாதாம், தேங்காய் பூ சேர்த்து நன்றாககிளறி இறக்கினால் சுவையான அரிசி பாயாசம் தயார். இந்த அரிசி பாயாசத்தை சூடாகவோ அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.






