- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
என்னதான் நம்ம குழந்தைகளுக்கு பார்த்து ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் கொடுத்தாலும் அவங்களுக்கு ரொம்ப புடிச்சது அப்படின்னா அது பாஸ்தா மேகி நூடுல்ஸ் இந்த மாதிரியான ஐட்டம்ஸ் தான். அந்த வகையில நம்ம பாஸ்தா வச்சு ஒயிட் சாஸ் பாஸ்தா டொமேட்டோ பாஸ்தா அப்படின்னு நிறைய வெரைட்டி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் அந்த வகையில இன்னைக்கு நிறைய மசாலாக்கள் எல்லாம் போட்டு செய்யக்கூடிய இந்த மசாலா பாஸ்தா சாப்பிடுவதற்கு நீங்க எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்ப டேஸ்டா இருக்கும்.
ஒரே ஒரு தடவை இந்த பாஸ்தா ரெசிப்பிய உங்க வீட்ல உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க அதுக்கப்புறம் உங்க குழந்தைங்க இந்த மாதிரியான ஸ்டைல தான் உங்க கிட்ட பாஸ்தா செஞ்சு தர சொல்லி கேப்பாங்க. இந்த பாஸ்தா ரெசிபியை வீட்ல செஞ்சீங்களா பாஸ்தா பிடிக்காத பெரியவங்க கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான டேஸ்ட்ல இருக்கும்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் நீங்க தாராளமா இந்த மசாலா பாஸ்த்தா ரெசிப்பிய செஞ்சி கொடுக்கலாம் சாப்டுட்டு கண்டிப்பா உங்கள பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே ரிச்சா இருக்கும். இந்த மசாலா பாஸ்த்தால நம்ம பால் சீஸ் பட்டர் எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய மசாலா பாஸ்தா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Ingredients
Method
முதலில் பாஸ்தாவை அரைவேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
பட்டாணியையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு தக்காளியை அரைத்து அந்த விழுதையும் சேர்த்துக் கொள்ளவும்
பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அனைத்தும் நன்றாக சேர்ந்து பிறகு அதில் பால் மற்றும் சீஸ் சேர்த்து நன்றாக கலந்து கேரட் மற்றும் வேக வைத்த பட்டாணி சேர்த்து நன்றாக கிளறவும்.
வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி பத்து நிமிடங்களுக்கு பிறகு இறக்கினால் சுவையான மசாலா பாஸ்தா தயார்.






