- Prep
- 5 min
- Cook
- 8 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
நம் வீட்டில் பெரும்பாலும் பூரி செய்தால் நாம் அதற்கு பலவகையான சைட் டிஷ்கள் செய்வோம். எப்பொழுதுமே பூரிக்கு ஒரு சிறந்த காம்பினேஷன் என்றால் அது பூரி கிழங்கு தான். இந்த பூரி கிழங்கை வைத்து நாம் ப*** சாப்பிட்டால் நாம் எத்தனை பூரி சாப்பிடுகிறோம் என்று நமக்கு கணக்கே தெரியாது அந்த அளவிற்கு நாம் சாப்பிடுவோம். காரணம் அது அவ்வளவு ருசியாக இருக்கும். கடைகளில் எல்லாம் எப்பொழுதுமே பூரிக்கு இந்த பூரி கிழங்கு தான் கொடுப்பார்கள்.
நாமெல்லாம் நினைத்திருப்போம் கடைகளில் வாங்கி சாப்பிடும் அந்த பூரி கிழங்கு தான் மிகவும் சுவையானதாக இருக்கும் என்று. ஆனால் வீட்டிலேயே மிகவும் சுவையாக நம்மால் பூரிக் இடங்கள் செய்ய முடியும் அதுவும் அனைவருக்கும் பிடித்த வகையில் கடைகளில் கிடைக்கும் அதே அளவிற்கு ருசியோடு நம்மால் செய்ய முடியும். அந்த பூரி கிழங்கை செய்வதும் கூட மிகவும் சுலபமானது தான் 20 நிமிடத்தில் நாம் செய்து முடித்து விடலாம்.
குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் இருக்கக்கூட இந்த பூரி கிழங்கையும் வைத்து கொடுக்கலாம் சாப்பிடாத குழந்தைகள் கூட மிகவும் விரும்பி சாப்பிட்டு முடித்து விடுவார்கள். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் இந்த பூரி கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த சூப்பரான அட்டகாசமான பூரி கிழங்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாய் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சோம்பு, பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். பிறகு பச்சைமிளகாய் வற்றலையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி அதையும் சேர்த்து கண்ணாடி பதம் வரும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும். தக்காளியையும் நீளவாக்கில் நறுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.
பின்பு தேவையான அளவிற்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து விட வேண்டும்.
அனைத்தும் சேர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு இறுதியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான பூரி கிழங்கு தயார்.






