- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Side Dish
நம் தமிழர் சமையலில் இந்த வாழைக்காய்க்கு என தனி இடம் உண்டு. இந்த வாழைக்காயில் பாஸ்பரஸ், பொட்டாசியம், புரத சத்து, போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது ரத்த அழுத்தத்தை போக்கும், எலும்புகளை பாதுகாக்கும், அது மட்டுமின்றி உடல் எடையை கூட வாழைக்காய் குறைக்கும். வாழைக்காய் சாப்பிடுவதால் நம் உடலில் வாய்வு பிடிப்பு போல் ஆங்காங்கே பிடித்துக் கொண்டு வலி எடுக்க ஆரம்பித்து விடும். அதற்காகவே பலர் இந்த காயை சாப்பிடாமல் ஒதுக்குவார்கள்.
குழந்தைகள் இதை வறுவல், சிப்ஸ், பொரியல் என்று பல வகையில் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இது போன்ற வாய்வு பிரச்சனை உள்ள பெரியவர்களுக்கு இந்த முறையில் வாழைக்காய் புட்டு சமைத்துக் கொடுப்பதினால் அவர்களுக்கு நிச்சயம் வாய்வு பிரச்சனை இருக்காது.
வாழைக்காய் வைத்து நிறைய வகையான ரெசிபிகளை செய்யலாம். வாழைக்காய் புட்டு வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ஹோட்டல் சுவையில் வாழைக்காய் புட்டு எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ஹோட்டல் சுவையில் வாழைக்காய் புட்டு எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
Ingredients
Method
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வாழைக்காய்களை போட்டு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
பின்பு வேக வைத்த வாழைக்காய் பாதி வெந்தும், எடுத்து ஆற வைத்து, அதன்தோலைச் சீவி விட்டு, அதை வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் நன்கு துருவிக் கொள்ளவும்.
அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு கடுகு. உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து, துருவிய வாழைக்காயை சேர்த்து, சிறிது உப்பு போட்டு தூவி நன்கு வதங்கியதும் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
மேலும் அதனுடன் பெருங்காயதூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, வெந்தவுடன் இறக்கி பரிமாறினால் ருசியான வாழைக்காய் புட்டு தயார்.






