- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Fry
இன்று .தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்ள பிளான் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள்.
இந்த வாழைக்காய் சுக்கா வறுவல் தயிர் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள்.
ஒரு சில சமயம் வீட்டிலுள்ளவர்கள் பொர்ணமி, அமாவாசை தினங்களில் ஏதேனும் அசைவம் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது என்று அடம் பிடிப்பார்கள். அவ்வாறு அந்த நேரத்தில் அசைவம் செய்யும் அதே சுவையில் சைவ உணவுகளையும் எளிமையாக சமைத்து கொடுக்க முடியும். அப்படி செய்யக் கூடிய ஒரு சுவையான உணவு தான் வாழைக்காய் சுக்கா. வாருங்கள் இதனை எப்படி அசைவ சுவையில் சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சுத்தம் செய்து சற்று பெரியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் வாழைக்காயை சுத்தம் செய்து, தோல் சீவி, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும்.
பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பின் மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்தவைகளை போட்டு, தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கிளறிய வாழைக்காயை, சிறிது சிறிதாக போட்டு, பொரித்துக் கொண்டு பௌலில் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, அதே கடாயில் வாழைக்காய் பொரித்த எண்ணெயுடன் மேலும், தேங்காய் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும், அரைத்த விழுதை போட்டு எண்ணெய் பிரிய நன்கு வதக்கவும்.
அவை வதக்கினதும், பொரித்த வாழைக்காயை போடவும். ஒன்று சேர நன்கு வதக்கி வாழைக்காய் குழையாமல் வெந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும். பிறகு பௌலுக்கு மாற்றவும்.
சுவையான, சுலபமான வாழைக்காய் சுக்கா தயார்.






