- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Chinese, Indian
- Course
- Breakfast, dinner
ஷெஸ்வான் சாப்சுயே தோசை மும்பை தெரு உணவு மற்றும் பல இந்திய உணவகங்களின் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய தோசையும் சைனீஸ் நூடுல்ஸும் சேர்ந்து ஒரு ஆனந்தம். தோசையும் நூடுல்ஸும் உலகளவில் அனைவராலும் விரும்பப்படும் உணவுகள் இவை இரண்டும். மசாலா தோசையில் இருந்து வழக்கமான உருளைக்கிழங்கு திணிப்பை எடுத்து,
இதையும் படியுங்கள் : சுவையான மும்பை பாகுபலி தோசை செய்வது எப்படி ?
அதற்குப் பதிலாக நாக்கைக் கூச வைக்கும் ஸ்கேசுவான் சாப்ஸூய்யைப் பயன்படுத்துங்கள், அது நிறைவாகவும் சுவையாகவும் இருக்கும். நூடுல்ஸ் மற்றும் வண்ணமயமான காய்கறிகளுடன், இந்த தோசையின் திணிப்பும் மிகவும் ஆடம்பரமானது. அதனால் இன்று இந்த ஷெஸ்வான் சாப்சுயே தோசை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை பொடியகவும், ஸ்பிரிங் போன்றும், முட்டைகோஸ், கேரட், குடைமிளகாய், போன்றவற்றை நீளமாக ( ஜூலியன்ஸ்) நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பரந்த வாணலியில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும். முட்டைக்கோஸ், கேரட் மற்றும் கேப்சிகம் (ஜூலியன்ஸ்) சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.
பின்னர் தக்காளி கெட்ச்அப், சில்லி சாஸ், செசுவான் சாஸ் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கலந்து, எப்போதாவது கிளறி, 1 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.
பிறகு நூடுல்ஸ் மற்றும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 2 நிமிடம் சமைக்கவும். அதை 4 சம பாகங்களாக பிரித்து தனியே வைக்கவும்.
பின்பு ஒட்டாத தவாவை (non stick tawa) சூடாக்கி, அதன் மீது சிறிது தண்ணீர் தெளித்து ஒரு துண்டு துணியைப் பயன்படுத்தி துடைக்கவும்.
அதன் பிறகு தவாவில் ஒரு கரண்டி அளவு மாவை ஊற்றி வட்ட இயக்கத்தில் பரப்பி அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி மிதமான தீயில் சிறிது மிருதுவாகவும் பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவும்.
ஸ்கெஜுவான் சாப்சுவேயின் ஒரு பகுதியை மையத்தில் ஒரு வரிசையில் வைத்து இருபுறமும் மடியுங்கள்.
இதோ சுவையான ஷெஸ்வான் சாப்சுயே தோசை தயார் இதனுடன் தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் வைத்து பரிமாறவும் அற்புதமான சுவையில் இருக்கும்.






