- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, punjabi
- Course
- Breakfast, dinner
ஷாஹி என்பது ஹிந்தியில் ராயல் என்று பொருள்படும், அதாவது ஷாஹி பனீர் என்பது முகலாய் சமையலில் இருந்து ஒரு ராயல் பனீர் செய்முறையாகும். இந்த செய்முறையில் தயிர், கொட்டைகள் மற்றும் காய்கறிகளின் சரியான கலவையால் ராயல் டச் சேர்க்கப்பட்டுள்ளது. ஷாஹி பனீர் என்பது தக்காளி அடிப்படையிலான கிரேவியில் பனீர் சேர்த்து கிரீம், வெண்ணெய் சேர்த்து செழுமையாகவும் சுவையாகவும் இருக்கும்! இது வரவேற்கத்தக்க மாற்றம் மற்றும் எளிமையான பொருட்களுடன் இருப்பது.
Ingredients
Method
ஒரு வாணலியில் 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
தயிருடன் காஷ்மீரி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
வெங்காயம் சிவக்க வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, தயிர் கலவையை ஊற்றி கலந்து, எண்ணெய் பிரிந்ததும், தக்காளி, முந்திரி சேர்த்து வதக்கவும்.
இதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.
இதனுடன் வெண்ணெய் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட்டு நைசாக அரைத்து வடிகட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சர்க்கரை சேர்த்து சர்க்கரை சிவந்ததும் மசாலா கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.
கெட்டியானதும், கரம் மசாலா தூள், கசூரிமேத்தி, பனீரை சேர்த்து மூடி 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
பின்னர் ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
சூப்பரான ஷாஹி பனீர் மசாலா ரெடி. சப்பாத்தி, நான், புல்கா,பரோட்டா வுடன் சூப்பராக இருக்கும்.






