- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Koottu
சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்றனர்.
இந்த பீன்ஸிற்கு சிவப்பு காராமணி என்று மற்றொரு பெயரும் உள்ளது. சோயா பீன்ஸை உணவில் அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடலானது எப்போதும் ஆரோக்கியத்துடன் காணப்படும். இவற்றில் கால்சியம், இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இவை வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. மேலும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இவற்றை தாராளமாக தங்களது உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த சோயாவை வைத்து சுண்டல், கிரேவி, சப்ஜி என்று பல விதங்களில் சமைக்கலாம். அந்த வகையில் இன்று நாம் சோயா வைத்து ஸ்பைசியான சோயா கூட்டை காண உள்ளோம். இதனை பூரி, சப்பாத்தி,புல்கா,சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட அருமையாக இருக்கும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு, நாவிற்கு சுவையையும் தரக்கூடிய ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப சுலபமா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டுனு இந்த ரெசிபியை செய்திடலாம். இதனை பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.
Ingredients
Method
முதலில் சோயாவை உரித்து சுத்தம் செய்து வைக்கவும். பின் வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை கொத்தை சேர்க்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்த சோயாவைச் சேர்த்து சிவப்பு நிறம் மங்களான சிவப்பு நிறத்திற்கு மாறும் வரை வதக்கவும்.
அதன் பிறகு சிக்கன் மசாலாவைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
பின் குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். விசில் போனதும் குக்கரை திறந்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சோயாபீன்ஸ் கூட்டு தயார்.






