- Prep
- 5 min
- Cook
- 5 min
- Serves
- 3
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
மேகி பாஸ்தா என்றாலே குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முதலில் எல்லாம் இந்த மேகி பாஸ்தா அனைத்துமே கடைகளில் தான் கிடைக்கும். ஆனால் இப்பொழுது நம் வீட்டிலேயே சட்டென்று செய்வதுபோல் சுவையான ரெடிமேட் பாஸ்தாக்களும் மேகிகளும் மளிகை கடைகளில் கிடைக்கிறது. சாப்பிடவே மாட்டோம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் இந்த மேகி பாஸ்தாவை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்னதான் இதனுடைய சுவை மிகவும் அருமையாக இருந்தாலும் நாம் குழந்தைகளுக்கு அளவாகவே இதை கொடுக்க வேண்டும். ஏதாவது ஒரு ஸ்பெஷலான நாட்களில் இதை அவர்களுக்கு செய்து கொடுத்து அசத்தலாம். அவர்களும் மிகவும் விரும்பியும் சாப்பிடுவார்கள் சந்தோஷமும் அடைவார்கள். அந்த வகையில் இன்று நாம் ஸ்வீட் கார்ன் வைத்து பாஸ்தா செய்யப் போகிறோம்.
இந்த மாதிரி பாஸ்தா மேகி போன்றவைகளில் நாம் அதிகமாக காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் மிகவும் நல்லது குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பதற்கு இதுவும் கூட ஒரு நல்ல வழி. எனவே இன்று நாம் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒரு சுவையான பாஸ்தா தான் பார்க்க போகிறோம். இதில் நாம் ஸ்வீட் கார்ன் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பாஸ்தா செய்வதற்கு நமக்கு குறைவான நேரம் மட்டுமே போதும். சீக்கிரத்தில் செய்து முடிக்கக்கூடிய இந்த அருமையான ஸ்வீட் கார்ன் பாஸ்தா எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை சேர்த்து அரைவேக்காட்டிற்கு வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்
இரண்டும் நன்றாக வதங்கியவுடன் ஸ்வீட் கார்ன் மற்றும் குடைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கரம் மசாலாவும் சேர்த்து நன்றாக கிளறவும். அதனுடன் தக்காளிசாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து கிளற வேண்டும்.
அனைத்தும் சேர்த்து பிறகு இறுதியாக பாஸ்தாவை சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கிளறினால் சுவையான ஸ்வீட் கார்ன் பாஸ்தா தயார்.






