- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன் கட்லெட் செய்து கொடுங்கள்.
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. காய்கறிகள் உண்ணாத குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்ந்திருப்பது தெரியாமல் சாப்பிட வைக்க இவ்வாறு கட்லெட்களாக செய்து கொடுக்கலாம்.
காய்கறிகள் வேண்டாம் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளும் கூட இதை விரும்பி உண்பார்கள். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். அந்த வகையில் நாம் கார்ன் சேர்த்து ஆரோக்கியமான கட்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போம். மாலை நேரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு 15 நிமிடங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் தாய்மார்கள் இந்த கார்ன் கட்லெட் செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது சுவையான கார்ன் கட்லெட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த ருசியான கார்ன் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கார்ன் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் துருவிய கேரட், கடலை மாவு, அரிசி மாவு, பிரெட் தூள், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகு தூள், சில்லி பிளேக்ஸ், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இதில் சிறிதளவு எடுத்து கட்லெட் போல் தட்டி பிரெட் தூளில் இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நாம் செய்து வைத்துள்ள கட்லெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கார்ன் கட்லெட் தயார்.






