- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
சத்தான உணவுகளை தேடி தேடி சமைப்பது மிகவும் அவசியமான ஒன்று. பலரும் சத்தான உணவு என்றால் அதற்காக பல மணி நேரம் செலவிட வேண்டும் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சத்தான உணவுகளை சமைத்து நமது குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.
நாம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய தால் பாத் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். பருப்பு சாத உணவு வகைகளில் இந்த பிரபலமான பிஸிபேளாபாத்தும் ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க அரிசி பருப்பு உணவு வகை மிக மிக எளிதாக செய்து விடக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
அதே வகையில் இந்த தால் பாத் சற்று வித்யாசமா முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். அலுவலகம் செல்வோர் முதல் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவது முதல் சுலபமாக டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு போகக் கூடிய இந்த தால் பாத் எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை தொடருங்கள்.
Ingredients
Method
அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பூண்டைத் தோல் உரித்துக்கொள்ளுங்கள்.
அரிசி,பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு, 5 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.
குக்கரில் வைத்து மூடி, விசில் 2 அல்லது 3 வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
பிறகு,வேறு வாணலியில் நெய், கறிவேப்பிலை சேர்த்துக் தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.
இந்த'பாத்'துக்கு அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் நல்ல சைடிஷ்.






