- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast
தோசை வகைகளிலே வெஜிடபுள் அடை சற்று வித்தியாசமாக அதே நேரத்தில் சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் அனைத்து வகை பருப்புகளையும் சேர்த்து மாவு அரைப்பதால் அதிக அளவு சத்துக்கள் கொண்ட நல்ல ஒரு சிற்றுண்டி. ஆனால் பெரும்பாலானருக்கு இந்த அடை தோசை பிடிக்காது காரணம் இதில் பருப்புகள் வெங்காயம் போன்றவற்றை சேர்ப்பது என்றாலும் கூட, இதை நாம் சாதாரண தோசை போல மொறு மொறுவென்று இருக்காது, அப்படி இந்த தோசை ஊற்றவும் முடியாது இந்த சமையல் குறிப்பு பதிவில் வந்த ஹோட்டலில் கிடைப்பது போல மொறுமொறுவென்று கிறிஸ்பியான அடை தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய தினசரி உணவு பட்டியலில் இட்லி, தோசை இவற்றை போலவே அடையும் ஒரு முக்கியமான உணவு தான். முன்பெல்லாம் இதை அரிசி பருப்பு அனைத்தும் ஊற வைத்து அரைத்து செய்ய இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆனால் இப்போதெல்லாம் உடனடியாக செய்யக் கூடிய பல வெஜிடபுள் அடை வகைகள் உள்ளது. அதுவும் இல்லாமல் அடைமாவு கடைகளில் கூட தனியாக விற்கப்படுகிறது. அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு பகுதியில் இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ஒரு வெஜிடபுள் அடை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
Ingredients
Method
அரிசியை 1 பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
காரட், பீட்ரூட் முள்ளங்கி, சுரைக்காய், முட்டைக்கோஸ் இவற்றை பொடியாக துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி ஊறியதும் களைந்து கிரைண்டரில் போட்டு மிளகாய் வற்றல், சோம்பு, உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தை விடச் சற்று தளர்வாக அரைது எடுத்துக் கொள்ளவும்.
அரைத மாவை 1 பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை கையால் பிசைந்து விட்டு போடவும் அதனுடன் வதக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல், கறிவேப்பிலை போட்டு கலந்துக் கொள்ளவும்.
காய்கள் சேர்த்தவுடன் மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் அடை ஊற்றும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி 1 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி அடை போல் வட்டமாக தேய்க்கவும்.
மேலே 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போடவும். பிறகு 3 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.






