ருசியான வெண்டைக்காய் புளி கூட்டு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

vendaikkai puli kootu
- Advertisement -

மதியம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான வெண்டைக்காய் புளி கூட்டு இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு சுலபமாக வீட்டிலே செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

-விளம்பரம்-
vendaikkai pulikootu
Print
No ratings yet

வெண்டைக்காய் புளிக்கூட்டு | Vendaikkai Puli Kootu Recipe In Tamil

மதியம் சுட சுட சோறுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான வெண்டைக்காய் புளி கூட்டு இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த வெண்டைக்காய் புளிக்கூட்டு சுலபமாக வீட்டிலே செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time16 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: vendaikai puli kootu, வெண்டைக்காய் புளி கூட்டு
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 வெண்டைக்காய்
  • 5 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • 4 பல் பூண்டு
  • ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • ¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து அத்துடன் நறுக்கிய வெண்டைக்காய் வேர்த்து 2 நிமிடம் வதக்கவும். வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வெண்டைக்காயை வேக விடவும்.
  • வெண்டைக்காய் வெந்ததும் அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் ஓரளவு சுண்டியதும் அடுப்பை நிறுத்தவும்.
- Advertisement -