- Prep
- 10 min
- Cook
- 30 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
100 கிராம் வெண்டைக்காயில் விட்டமின் சி, விட்டமின் இ, விட்டமின் கே, கால்சியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்களும் உள்ளனர். வெண்டைக்காயில் உள்ள மெக்னீசியம் மூளையில் உள்ள நெஃப்ரான் கட்டுகளுக்கு அதிக அளவில் வலு சேர்க்கும். இதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வெண்டைக்காயை வைத்து சமையல் செய்து கொடுத்தால் மூளை வளர்ச்சியும், செயல்பாடும் அதிகரிக்கும் என்பார்கள்.
Ingredients
Method
செய்முறை
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 3 டீஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடேறும் வரை காத்திருக்கவும் சூடு ஏறியதும் தாளிப்பதற்காக வைத்துள்ள பொருட்கள்.
கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்பு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள் பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளியின் பச்சை வாடை போய் மென்மையாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
அதன் பின்பு நாம் எடுத்து வைத்துள்ள வெண்டைக்காயை உங்களு ஏற்றவாறு நறுக்கி 6 லிருந்து 10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பின்பு இதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்க்கவும்.
தேங்காய் பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும், அதன் பின்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். பிறகு புளியை கரைத்து தயார் செய்துள்ள புளிச்சாற்றினை ஊற்றுங்கள்.
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். குழம்பு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடவும் இப்பொழுது சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயாராகிவிட்டது.






