வெண்டைக்காய் சாதம் எப்படி இருக்கும்? வழவழப்பு தன்மை போகாமல் இருக்கும். சாப்பிடுறதுக்கு நல்லாவே இருக்காது அப்படின்னு யோசிக்கிறீங்களா அதுதான் தப்பு செய்கின்ற விதத்துல செஞ்சோம் அப்படின்னா டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான ரெசிபிக்கு இது செய்முறையில செஞ்சு பாருங்க. இந்த வெண்டைக்காய் சாதத்தை அப்படியே சும்மா வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி செய்யாம இதுக்கு ஒரு பொடியும் அரைத்து சேர்க்க போறோம். இப்படி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு சைடிஸ் கூட தேவை இல்ல அப்பளம் மட்டும் பொரிச்சுக்கிட்டாலே போதும் அவ்ளோ ருசியா இருக்கும்.
டேஸ்டான சுவையான இந்த வெண்டைக்காய் சாதத்தை குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்து விடலாம். வீட்ல இருக்குறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு சமைக்கணும் அப்படின்னு யோசிக்கிற சமயத்துல இந்த மாதிரி ஈஸியா வெண்டைக்காய் சாதம் மட்டும் லஞ்சுக்கு செஞ்சிடுங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். டேஸ்டான ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். அதனால செய்யும்போதே கொஞ்சம் நிறையவே செஞ்சு வச்சுக்கோங்க. கண்டிப்பா எல்லாமே காலியாகிவிடும். குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்சுக்கு கொடுத்து விட்டா கூட அவங்களும் டிபன் பாக்ஸ காலியாக்கி தான் கொண்டு வருவாங்க.
அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். சுவையான சூப்பரான இந்த வெண்டைக்காய் சாதம் ரெசிபி ஒரு தடவ கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. எப்பவுமே ஒரே மாதிரியா முட்டை சாதம், புளி சாதம் லெமன் சாதம் குழந்தைகளுக்கு கொடுத்து விடாமல் இந்த மாதிரி ஆரோக்கியமான காய் வச்சு ஒரு தடவை குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு லன்ச் கொடுத்து விடுங்கள். ரொம்ப ரொம்ப நல்லது. கடைசியாக சீரகம் வேர்கடலை காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைச்சு சேர்க்கும்போது சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான வெண்டைக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெண்டைக்காய் சாதம் | Vendakkai Sadam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி வெண்டைக்காய்
- 2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கப் வடித்த சாதம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 தக்காளி
- 2 வர மிளகாய்
- 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை சீரகம் பெரிய வெங்காயம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வழவழப்பு தன்மை போக வதக்கவும்.
- பிறகு அதனை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தக்காளியை அரைத்து சேர்த்து அதன் மேல் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து பச்சை வாசனை போனதும் ஒரு கப் சாதம் போட்டு நன்றாக கிளறவும்.
- தனியாக ஒரு கடாயில் வேர்க்கடலை காய்ந்த மிளகாய் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து ஆற வைத்த அரைத்துக் கொள்ளவும்.
- அந்த பொடியை சாதத்தின் மேல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெண்டைக்காய் சாதம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!