- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Breakfast, dinner
சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைத்தால் போதும் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருளில் வெண்டைக்காயும் ஒன்று. இந்த வெண்டைக்காயை வைத்து புளி குழம்பு, சாம்பார், பொரியல் இந்த மூன்றை மட்டும் தான் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் செய்வோம். அப்படி இல்லையென்றால் மோர் குழம்பு வைப்போம். இது அல்லாமல் புதுவிதமான ஸ்டைலில், வித்தியாசமான ஒரு தொக்கை நம் வீட்டிலேயே எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெண்டைக்காய் பிடிக்காதவங்க யாருமே இல்ல.
விதவிதமா ருசிச்சு சாப்பிடணும்னு நினைக்கிறவங்க வட இந்திய ஸ்பெஷல்ல வெண்டைக்காய் தயிர் தொக்கு செய்தால் இனி எப்பவுமே இதுதான்னு சப்பு கொட்டி சாப்பிடுவீங்க. இந்த தொக்கை எளிதாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து அட்டகாசமாக செய்து விடலாம். இவற்றை தயார் செய்வது சில சமயத்தில் கடினம் போன்று தோன்றும். ஆனால் அது ரொம்பவும் ஈஸி ஆகும். வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். இதை சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். குறிப்பாக இந்த கிரேவியை சப்பாத்தி, தோசை, பூரி இவைகளுக்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சுட சுட சாப்பாட்டில் பிசைந்தும் சாப்பிடலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!
Ingredients
Method
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி விட்டு, ஒரு துணியில் துடைத்து எடுத்துக் கொள்ளவும். பின் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை சேர்த்து லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும். பின் தயிர் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் வதக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு கலந்து, ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும். இறுதியில் ப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் தயிர் தொக்கு தயார்.






