சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான வெண்டைக்காய் பொரியல் கூட்டு இப்படி செய்து பாருங்க!

vendakai poriyal
- Advertisement -

சுட சுட சாதம் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் இல்லாமல் வெண்டைக்காய் கண்டாலே பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை பார்த்து நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-
vendakkai poriyal
Print
1.50 from 2 votes

வெண்டைக்காய் பொரியல் | Vendakki Poriyal Recipe In Tamil

சுட சுட சாதம் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
அதுமட்டும் அல்லாமல் வெண்டைக்காய் கண்டாலே பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: vendakai poriyal, வெண்டைக்காய் பொரியல்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ வெண்டைக்காய்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • ¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ¼ டீஸ்பூன் சீரக தூள்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெண்டைக்காயை கழுவி நன்கு துடைத்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • விருப்பப்பட்டால் நறுக்கிய வெண்டைக்காயை ஓவனில் 2 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அத்துடன் தேவையான அளவு உப்பு, சீரக தூள், மிளகாய் தூள், சேர்த்து மெதுவாக கிளறி வதக்கி எடுக்கவும்.
- Advertisement -