- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
வேப்பம்பூவில் துவையலா அப்படின்னு எல்லாரும் முகம் சுழிச்சிருப்பீங்க இல்லையா? ஆனா நம்ம எல்லாருக்குமே தெரியும் வேப்பமரத்துல இருக்கக்கூடிய ஒவ்வொரு பாகங்களும் நம்ம உடம்பில் இருக்க பல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது. இந்த வேப்பம் பூவை நம்ம சாப்பிடுறதால நம்ம உடம்புல இருக்க பல பிரச்சனைகள் சரியாகும். வேப்பம்பூ சாப்பிடுவதால் வயிறுல இருக்க கிருமிகள் எல்லாம் நீங்கி வயிறு குடல் சம்பந்தமான பிரச்சினைகள் இது எதுவுமே வரவிடாமல் தடுக்கும்.
உடல் எடையை குறைக்க உதவும், தோல் நோய்கள் வரவிடாமல் பாதுகாக்கும். ஆனால் வேப்பம்பூவை நம்மளால அப்படியே சாப்பிட முடியாது அது ரொம்ப ரொம்ப கசக்கும். அதனால வேப்பம்பூ வச்சு நம்ம ஒரு துவையல் அரைக்கலாம். அந்த துவையல் நம்ம சாப்பிட்டா ரொம்ப கசக்காது. அதே நேரத்துல நம்ம போடக்கூடிய சில பொருட்களால துவையல் ரொம்ப டேஸ்டா மாறிடும்.
இந்த வேப்பம்பூ துவையல்ல நம்ம இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். அதோட வெறும் சாதத்தில் சூடான துவையல் போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்படி சைடுஷா வெச்சு சாப்பிடும்போது நமக்கு கசப்பும் தெரியாது அதே நேரத்தில் நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட. முக்கியமா குழந்தைகளுக்கு இந்த வேப்பம்பூ துவையல் கொடுப்பதால் அவர்களுக்கு சின்ன வயசுல இருந்தே நம்ம நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கலாம்.உடம்பு ரொம்ப ஹீட்டா இருக்கு அப்படின்னா இந்த வேப்பம்பூ துவையல் செஞ்சு சாப்பிடலாம். கசப்பே தெரியாம ரொம்பவே அருமையா ஆரோக்கியமா இருக்க கூடிய இந்த வேப்பம்பூவைகள் எப்படி சட்டுனு செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
Ingredients
Method
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு பொன்னிறமாக ஆகும் வரை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் வேப்பம் பூவை கழுவி சுத்தம் செய்து போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வேப்பம்பூ உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் அனைத்தும் ஆறிய உடன் சேர்த்துக்கொள்ளவும். பிறகு அதனுடன் புளி,உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது கசப்பே இல்லாத சுவையான வேப்பம்பூ துவையல் ஆரோக்கியமான முறையில் தயார்.
சுடு சாதத்தில் போட்டோ பிசைந்து சாப்பிட்டால் இதற்கு சைட் டிஷ் வேறு எதுவும் தேவையில்லை மிகவும் அருமையாகஇருக்கும்.






