Advertisement
அசைவம்

கிராமத்து மணம் வீசும் இந்த ஆட்டு கறி குழம்பு ஒருமுறை இப்படி  செய்து பாருங்க! சட்டி நிறைய செய்தாலும் கொஞ்சம் கூட மிச்சம் இருக்காது!

Advertisement

 என்ன தான் சீக்கிரத்தில் சமைப்பதற்கு ஏற்றவாறு இன்றைய நவீன உலகம் பல விதமான எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்திருந்தாலும், அவற்றை பயன்படுத்தி மசாலா அரைத்து வைக்கும் குழம்பின் சுவை சாப்பிடுவதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் கிராமங்களில் செய்யும் அந்த சுவையை நம்மால் இப்பொழுது சாப்பிட முடியவில்லை. அவர்கள் செய்யும் கை பக்குவமே தனியாக இருக்கும். அடுப்பில் குழம்பு கொதிக்கும் பொழுதே பசியைத் தூண்டி விடும். அந்த அளவிற்கு அவர்களின் செய்முறை இருக்கும்.

கிராமத்து சமையலில் பெரிதளவில் மசாலாக்கள் சேர்க்கவில்லை என்றாலும் அந்த குழம்பின் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். அப்படி கிராமங்களில் செய்யக்கூடிய இந்த ஆட்டு கறி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.கிராமத்து ஆட்டு கறி குழம்பு என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சிறுவயதில் குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து நமது தாத்தா பாட்டி யுடன் சாப்பிட்ட தருணங்கள் தான். கிராமத்தில் தண்ணீர் , கற்று என்று பலவும் சேர்த்து அந்த குழம்பிற்கு அதீத சுவை குடித்துவிடும் . கிராமத்தில் சமையல் செய்யும் பொழுது உப்பு, காரம் எதனையும் பார்க்காமல் சமைத்து தருவார்கள் அவர்களின் கைப்பக்குவத்தில் சாப்பிடுவது என்பது ஒரு தனி சந்தோஷம் தான்.

Advertisement

கிராமங்களில் செய்யக்கூடிய ஒரு ஆட்டு கறி குழம்பு தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகிறோம். இவ்வாறு ஆட்டு கறி குழம்பு கிராமத்து முறையில் மண்பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை வேறு விதமாகத்தான் இருக்கும். வாருங்கள் கமகம வாசத்துடன் சுவையான கிராமத்து ஆட்டு கறி குழம்பு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கிராமத்து ஆட்டு கறி குழம்பு | Village Mutton Curry In Tamil

Print Recipe
கிராமத்து சமையலில் பெரிதளவில் மசாலாக்கள் சேர்க்கவில்லை என்றாலும் அந்த குழம்பின் சுவை அவ்வளவுஅற்புதமாக இருக்கும். அப்படி கிராமங்களில் செய்யக்கூடிய இந்த ஆட்டு கறி குழம்பை எவ்வாறு
Advertisement
செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.கிராமத்துஆட்டு கறி குழம்பு என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சிறுவயதில் குழந்தைகள் ஒன்றாகசேர்ந்து நமது தாத்தா பாட்டி யுடன் சாப்பிட்ட தருணங்கள் தான். கிராமத்தில் தண்ணீர், கற்று என்று பலவும் சேர்த்து அந்த குழம்பிற்கு அதீத சுவை குடித்துவிடும் . கிராமத்தில் சமையல் செய்யும் பொழுது உப்பு, காரம் எதனையும் பார்க்காமல் சமைத்து தருவார்கள் அவர்களின் கைப்பக்குவத்தில் சாப்பிடுவது என்பது ஒரு தனி சந்தோஷம் தான்.
Advertisement
Course Gravy, LUNCH
Cuisine tamilnadu
Keyword Village Mutton Curry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 902

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3/4 கிலோ ஆட்டு கறி
  • 250 கிராம் சின்ன  வெங்காயம் 
  • 100 கிராம் கொத்தமல்லி
  • 15 காய்ந்த மிளகாய்
  • 1/2 மூடி தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 10 பல் பூண்டு
  • விரல் நீள துண்டு இஞ்சி 
  • 100 கிராம் நல்லெண்ணெய்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 ஸ்பூன் சோம்பு 
  • 2 பட்டை
  • 2 கிராம்பு 
  • 2 ஏலக்காய்
  • 2 அன்னாசி பூ

Instructions

  • அடுப்பில் கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, மிளகாய், மிளகாய், சீரகம்சேர்த்து வறுத்து அரைக்கவும்.
  • பிறகு அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி அரைக்கவும். சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும்.
  • பிறகு மண்பானையை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கறியை சேர்த்து நன்கு வதக்கி தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • அரைத்த இஞ்சி,பூண்டு, கொத்தமல்லி மிளகாய் விழுது, அரைத்த சின்ன வெங்காய விழுது, மஞ்சள் தூள் சேர்த்துகறியை நன்கு கொதிக்கவிடவும். கறி நன்றாகவெந்ததும் அரைத்த தேங்காய் துருவல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  • நன்கு கொதித்ததும் மசாலா வாசனை போனதும் இறக்கிவைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை தாளித்து குழம்பில் ஊற்றவும்.
  • சுவையான கிராமத்து ஆட்டுகறி குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Cholesterol: 7.8mg | Sodium: 1092mg | Potassium: 782mg | Sugar: 3.3g | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

40 நிமிடங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

21 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago