Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் கிராமத்து மட்டன் பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகி விடும்!

Advertisement

அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள். மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க கூடியது. பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அனைவருடைய வீட்டிலும் மட்டன் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டனை பொறுத்தவரை அதில் வெறும் குழம்பு மட்டும் தான் வைக்க முடியும் என்பது கிடையாது. ஏனென்றால் மட்டனில் நிறைய வகையான ரெஸிபிகளை நாம் செய்யலாம். மட்டன் கறி தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வெரட்டிகளை செய்யலாம். அதனையுடைய சுவையும் ஒவ்வொரு ரெசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்.

அதிலும் மட்டனை வேக வைத்து பின் எண்ணெயில் செய்யப்படும் பிரட்டல் அசைவ பிரியர்களின் பேவரட் டிஷ். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, புலாவ், வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம். நீங்கள் இந்த மட்டன் பிரட்டலை ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு மட்டன் ரெசிபி ஆக இந்த மட்டன் பிரட்டல் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த மட்டன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். எனவே, இந்த பதிவில் வாயில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் பிரட்டல் எப்படி செய்வது? என தெரிந்து கொள்வோம்.

Advertisement

கிராமத்து மட்டன் பிரட்டல் | Village Style Mutton Pirattal Recipe In Tamil

Print Recipe
அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள். மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க கூடியது. பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு
Advertisement
வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அனைவருடைய வீட்டிலும் மட்டன் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டனை பொறுத்தவரை அதில் வெறும் குழம்பு மட்டும் தான் வைக்க முடியும் என்பது கிடையாது. ஏனென்றால் மட்டனில் நிறைய வகையான ரெஸிபிகளை நாம் செய்யலாம். அதிலும் மட்டனை வேக வைத்து பின் எண்ணெயில் செய்யப்படும் பிரட்டல் அசைவ பிரியர்களின் பேவரட் டிஷ். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Village Style Mutton Pirattal
Advertisement
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 105

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

Ingredients

  • 1/2 கி மட்டன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 வர ‌மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி ஒரு‌ குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம், மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதன்பிறகு மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு சுண்ட விடவும்.
  • பின் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கலந்து விட்டு எண்ணையிலேயே மட்டனை வேக வைக்கவும்.
  • மட்டன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் பிரட்டல் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 105kcal | Carbohydrates: 5.9g | Protein: 42.2g | Fat: 4.8g | Saturated Fat: 1.9g | Sodium: 151mg | Potassium: 67mg | Vitamin A: 16IU | Vitamin C: 134mg | Calcium: 23mg | Iron: 60mg

இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை ரவா மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க! ரெம்ப ஹெல்தியான ரெசிபி!

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

5 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

5 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

7 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

8 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

8 மணி நேரங்கள் ago