Home அசைவம் காரசாரமான ருசியில் கிராமத்து மட்டன் பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! எவ்வளவு செய்தாலும்...

காரசாரமான ருசியில் கிராமத்து மட்டன் பிரட்டல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகி விடும்!

அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள். மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க கூடியது. பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அனைவருடைய வீட்டிலும் மட்டன் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டனை பொறுத்தவரை அதில் வெறும் குழம்பு மட்டும் தான் வைக்க முடியும் என்பது கிடையாது. ஏனென்றால் மட்டனில் நிறைய வகையான ரெஸிபிகளை நாம் செய்யலாம். மட்டன் கறி தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வெரட்டிகளை செய்யலாம். அதனையுடைய சுவையும் ஒவ்வொரு ரெசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

அதிலும் மட்டனை வேக வைத்து பின் எண்ணெயில் செய்யப்படும் பிரட்டல் அசைவ பிரியர்களின் பேவரட் டிஷ். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, புலாவ், வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம். நீங்கள் இந்த மட்டன் பிரட்டலை ஒரு முறை வீட்டில் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு மட்டன் ரெசிபி ஆக இந்த மட்டன் பிரட்டல் மாறி போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அதன் பின்பு அடிக்கடி அவர்கள் இந்த மட்டன் ரெசிபியை உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ருசியாகவும் மணமாகவும் இருக்கும். எனவே, இந்த பதிவில் வாயில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் பிரட்டல் எப்படி செய்வது? என தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

கிராமத்து மட்டன் பிரட்டல் | Village Style Mutton Pirattal Recipe In Tamil

அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். பொதுவாக ஒரு வீட்டில் இருக்கும் அங்கத்தவர்களின் அநேகமானவர்கள் மட்டன் பிரியர்களாக இருப்பார்கள். மட்டனில் ஒவ்வொரு பாகங்களும் வித்தியாசம் வித்தியாசமாக சமைக்க கூடியது. பொதுவாக நம் வீட்டில் மட்டன் பயன்படுத்தி உணவு தயாரிப்பது என்றால் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் கிரேவி என அதிகபட்சமாக இந்த இரு வகையிலான மட்டன் ரெசிபியை தான் தயார் செய்து பரிமாறுவோம். இது நமக்கே சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். அனைவருடைய வீட்டிலும் மட்டன் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டனை பொறுத்தவரை அதில் வெறும் குழம்பு மட்டும் தான் வைக்க முடியும் என்பது கிடையாது. ஏனென்றால் மட்டனில் நிறைய வகையான ரெஸிபிகளை நாம் செய்யலாம். அதிலும் மட்டனை வேக வைத்து பின் எண்ணெயில் செய்யப்படும் பிரட்டல் அசைவ பிரியர்களின் பேவரட் டிஷ். இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Village Style Mutton Pirattal
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி மட்டன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 வர ‌மிளகாய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி ஒரு‌ குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம், மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதன்பிறகு மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்து நன்கு சுண்ட விடவும்.
  • பின் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்கு கலந்து விட்டு எண்ணையிலேயே மட்டனை வேக வைக்கவும்.
  • மட்டன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைல் மட்டன் பிரட்டல் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 105kcal | Carbohydrates: 5.9g | Protein: 42.2g | Fat: 4.8g | Saturated Fat: 1.9g | Sodium: 151mg | Potassium: 67mg | Vitamin A: 16IU | Vitamin C: 134mg | Calcium: 23mg | Iron: 60mg

இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை ரவா மட்டன் பிரியாணி இப்படி செய்து பாருங்க! ரெம்ப ஹெல்தியான ரெசிபி!