Advertisement
சைவம்

காலை டிபனுக்கு பாட்டி சொல்லி கொடுத்த கோதுமை அப்பம் ரெசிபி! ஒரு அப்பம் கூட மிச்சம் இருக்காது!

Advertisement

பாட்டி காலத்து ஸ்டைலில் அப்பம் சூப்பரான சுவையில், ஆரோக்கியமான முறையில் கோதுமை மாவு கொண்டு எப்படி தயாரிப்பது? மேலே மொறு மொறு என்று கிரிஸ்பியாகவும், உள்ளே மெத்தென்று மிருதுவாகவும் இருக்கக் கூடிய இந்த ஆரோக்கியம் நிறைந்த சுவையான கோதுமை அப்பம் சுலபமாக எப்படி நாமும் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

வெறுமனே கோதுமை மாவை கலந்து தோசை சுட்டு பார்த்தால் யாருக்கும் தோசை பிடிப்பது கிடையாது. அதில் சில பொருட்களை சேர்த்து நீங்கள் இந்த முறையில் அப்பம் செய்யும் பொழுது ரொம்பவே ருசியானதாக இருக்கும், ஆரோக்கியமான முறையில் அப்பம் சுலாமாக சுடுவதற்கு வரும். ரொம்ப ருசி நிறைந்த இந்த கோதுமை அப்பம் அருமையான ரெசிபி, குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

Advertisement

அந்த வகையில் கோதுமை அப்பம், கோதுமை தோசை சுடுவது போல ருசியாக வருவதற்கு எளிதான முறையில் செய்யலாம் . எப்பொழுதும் தோசை, இட்லி என்று போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கோதுமை அப்பம் சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள் வீட்டில் , கோதுமை மாவு இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த அப்பம் செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ருசி தரும் அந்த கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கோதுமை அப்பம் | Wheat Appam Recipe In Tamil

Print Recipe
கோதுமை அப்பம், கோதுமை தோசை சுடுவது போல ருசியாகவருவதற்கு எளிதான முறையில் செய்யலாம் . எப்பொழுதும் தோசை,
Advertisement
இட்லி என்று போர் அடிக்குதா.கொஞ்சம் இப்படி வித்தியாசமாக கோதுமை அப்பம் சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள்வீட்டில் , கோதுமை மாவு இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த அப்பம் செய்து அசத்தலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தைகடத்தாமல் ருசி தரும் அந்த கோதுமை அப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Wheat Appam
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 55

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கோதுமை மாவு
  • 100 கிராம் அரிசி மாவு
  • 150 கிராம் வெல்லம்
  • 1/4 லிட்டர் எண்ணெய் அல்லது நெய்
  • 4 ஏலக்காய்

Instructions

  • கோதுமை மாவு,அரிசி மாவு இரண்டையும் தனித்தனியே சலித்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் வெல்லத்தை போட்டு கரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் கோதுமை மாவை சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.அத்துடன் அரிசி மாவு, ஏலக்காய்பொடி சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஊற்றிய உடனே உப்பிவரும்.பிறகு திருப்பி போட்டு சற்று பொன்னிறமாக வரும் வரை வேகவிடவும்.
  • இருபுறமும் சிவக்க வெந்ததும் கரண்டியால் எண்ணெய்யை வடித்து பிறகு எடுக்கவும். இது சற்று எண்ணெய்குடிக்கும் பதார்த்தம். எண்ணெய் பதார்த்தம் ஒத்துக் கொள்ளாதவர்கள் இதே மாவை வைத்துபணியாரம் செய்யலாம்.
  • பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து அதில் நெய் தடவி, மாவை கரண்டியில் எடுத்து ஒவ்வொரு குழியிலும் ஊற்றி வேகவிடவும்.ஒரு புறம் சிவக்க வெந்ததும் திருப்பி போட்டு வேக எடுக்கவும்.
  • இருபுறமும் பொன்னிறமாக சிவந்த வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்.

Nutrition

Serving: 2g | Calories: 55kcal | Carbohydrates: 21g | Protein: 2.9g | Fat: 0.33g | Fiber: 3g
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

20 மணி நேரங்கள் ago